Header Ads



பொத்துவிலில் யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவது யார்..?

(எம்.ஏ. தாஜகான்)

பொத்துவிலில் தொடர்ந்தும் யானைகளின் அட்டகாசம் காரணமாக களப்பை அண்மித்த கரையோரப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக பொத்துவில் களப்புக்கட்டு, அல்-குதா கரையோரங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களின் வீடுகள், தென்னந்தோட்டங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. 

இரவு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் இருந்து வருகின்ற யானைகள் பொதுமக்கள் வாழிடங்களை அழித்து வருகின்றமையால் மக்கள் உயிராபத்து அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட வனவள அதிகாரிகள் உடனடியாக யானைப்பாதுகாப்பு அரண்களை அமைக்க நடவடிக்கை எடுக்க முன்வருமாறு பொதுமக்கள் வேண்டுகின்றனர்.

No comments

Powered by Blogger.