Header Ads



கிழக்கு மாகாண முதலமைச்சர் குறித்து, முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்து எதிர்க்குரல்..!

-SLMC யின் உயர்பீட உறுப்பினர் MH. கபூர்-

அண்மைக்காலமாக எமது கட்சியின் பிரதி தலைவரான கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கைகள் எமது பார்வையில் கட்சியின் வளர்ச்சிக்கு தடையாகவே தென்படுவதோடு .எமது பிரதேச கட்சி ஆதரவாளர்களின் மனங்களை புன்னடையச் செய்தும் வருகின்றது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்ட மூன்று முஸ்லிம் ஊர்களில் ஒன்றான ஏறாவுரை முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் ஒற்றுமைப்படுத்துவதற்காக தலைமைத்துவம் எடுத்த முடிவை ,இவ்வூர் மகனான கட்சியின் தவிசாளர் அல்ஹாஜ் பசீர் சேகு தாவூத் பெரும் மனங் கொண்டு ஏற்று கட்சியின் ஒற்றுமையை பலப்படுத்தினார்.

இவ்வேளையில் கூட ஒற்றுமைப்பட்ட ஏறாவூரில் பிரிவினையை ஏற்படுத்தவே முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.

  1994 ஆம் ஆண்டு தொடக்கம் கௌரவ அலி சாகிர் மௌலானவை கட்சிக்குள் உள்வாங்க எடுத்துக் கொண்ட முயற்சி 2015 யில் கைகூடியபோது அதனை தடுக்கும் முயற்சியிலேயே முதலமைச்சர் நடந்து கொண்டது ஊரின் ஒற்றுமையை குழைத்து அதில் குளிர் காய எடுக்கும் நடவடிக்கையாகவே எங்களுக்கு தென்பட்டது.

அண்மையில் ஏறாவூர் ஆதார வைத்திய சாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிக்கு இவ்வூரை சேர்ந்த எந்தவொரு அரசியல் வாதியும் அழைக்கப்டக்கூடாது என்ற தடையை விதித்து ,தான் மட்டுமே அதிதியாக கலந்து கொண்டது இவரின் கர்வப் போக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இத்தனைக்கும் அன்று அவரால் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடத்துக்கு முன்னாள் அமைச்சர் பசீர் சேகு தாவூத் அவர்களினதும் , முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் அவர்களினதும் நிதி ஒதுக்கீடே முழுக்காரணமாகும்.

இவ்விருவரும் ஏறாவுரை பிறப்பிடமாக கொண்டவர்களாக இருந்தும் இவர்களை அழைப்பதற்கு முதலமைச்சருக்கு மனசு வரவில்லை.

அது மாத்திரமல்லாமல் ,ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் சிலர் ,சென்ற  திங்களன்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் அவர்களை சந்தித்து வைத்தியசாலைகளின் தேவைகள் குறித்த கோரிக்கைகளை கையளித்தனர். இதனை அறிந்துகொண்ட முதலமைச்சர் இக்குழுவினரை தொலைபேசியில் கடுமையாக கண்டித்துள்ளார்.

என்னால் முடியாதது ,வேறு எந்த அமைச்சர் மூலமும் முடியாது என்றும்,எது வேண்டுமென்றாலும் என்னிடமே பேச வேண்டும் என்று அபிவிருத்திக் குழு செயலாளரை கண்டித்துள்ளார்.

இவ்வாறு பல்வறு விடயங்களில் இவரது சுயநல போக்கை சுட்டிக்காட்டலாம்.
எல்லாமே நானாகத்தான் இருக்கவேண்டும் என்ற இவரது சிந்தனையில் மாற்றம் வரவேண்டும்.ஏனெனில் இவர் SLMC யின் பிரதி தலைவர்., இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா எமது கட்சியின் ஒரேயொரு மக்கள் பிரதிநிதி.

 சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக எமது கட்சிக்காக உழைத்த தவிசாளர் பசீர் சேகு தாவூத்.

இவர்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் செய்ய முயற்சிக்கும்போது ,நிச்சயம் கட்சியின் ஒற்றுமை வீணாகிப் போகும் நிலை உருவாகும்.

எனவே ,அனைவரையும் அணைத்துக்கொண்டு தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் முன்வரவேண்டும்.
அவ்வாறில்லையேல் கட்சியின் தலைமையும் ,உயர்பீடமும் தலையிட்டு இவரது போக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.

2 comments:

  1. இவர்களின் பிரச்சினை பார்க்க இன்னொரு காங்ரஸ் வேண்டும் இவர்களுக்கு இது பழக்கப்பட்டதால் சூடு சொரண இல்லாமல் இருக்கிறார்கள் ஆனால் சமுதாயம் வெட்கப்படுகிறது.வெட்கம் கெட்ட ஜெம்மங்கள் இன்னும் தேசிய பட்்டியலுக்கு தீர்வு காணவில்லை.எவ்வளவுதான் பதவி பெரிதாக இருந்தாலும் வெட்கம் இல்லை என்றால் எதுவும் பயன் தராது இப்படிப்பட்டவர்களிடம் மக்கள் எந்த முன்மாதிரியை பின்பற்றுவது.?

    ReplyDelete

Powered by Blogger.