தேர்தல் பிரச்சாரத்திற்காக மகன் அடகுவைத்த வீட்டை, மீட்டுக்கொடுத்த முன்னாள் பிரதமர்
நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க வீடு ஒன்றை அடகு வைத்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் எட்டு தேர்தல் தொகுதிகளில் நான்கு தேர்தல் தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்தேன். பிரச்சார செலவுகளுக்காக நான் தங்கியிருந்த வீட்டை அடகு வைத்து பணம் திரட்டினேன்.
இந்த வீட்டை முன்னாள் பிரதமரும் தந்தையுமான ரட்னசிறி விக்ரமநாயக்க எனக்கு வழங்கியிருந்தார். அடகு வைத்திருந்த வீட்டை தந்தை ரட்னசிறி மீட்டுக் கொடுத்தார்.
ஜென்ம ஜென்மங்களுக்கும் இவ்வாறான பெற்றோர் கிடைக்க வேண்டுமென பிரார்த்தனை செய்கின்றேன். எனது தந்தை அரசியலில் ஈடுபட்டு களவாடியவர் அல்ல, அரசியலில் ஈடுபட்டு தனது சொத்துக்களை இழந்தவர்.
இற்றைக்கு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் நேர்மையான அரசியல்வாதிகள் மிகவும் சொற்பளவிலேயே இருக்கின்றார்கள்.
தந்தையின் வழித்தடத்தை பின்பற்றி நான் சென்றாலும் தந்தையின் அரசியல் நிலைமைகளை பிடிக்க ஜென்மத்தில் முடியாது என விதுர விக்ரமநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Post a Comment