Header Ads



இன ஐக்கியத்திற்காக பாடுபட்ட பௌத்த தேரர் மரணம், திரண்டுவந்து பார்வையிடும் முஸ்லிம்கள் (படங்கள்)


வேஉட வில்லி ஹத்பத்து விஹாராதிபதி எலவிட்டிகம இந்திரரத்னாபிதான ஹிமியின் மரணப் பூதலைடலைப் பார்வையிடுவதற்காக குருநாகல் மற்றும் பறகஹதெனியாவிலுள்ள பெரு எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் உலமாக்கள் நேற்றிரவு 20-10-2015 கொட்டும் மழையிலும் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன் பறகஹதெனிய பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலினால் அங்கு வருகை தந்துள்ள அனைத்து மக்களுக்கும் இராப் போசன உணவு சமைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பறகஹதெனிய பெரிய பள்ளிவாசல் தலைவர் நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களான முன்னாள் அமைச்சர் சுனேத்திரா ரனசிங்க மற்றும் முன்னாள் மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட இன முரண்பாடுகளின் போது முஸ்லிம்களுடைய பாதுகாப்பையும் சிங்கள முஸ்லிம் மக்களிடையே சமாதானத்தை  உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் மிகவும் மும்முராக ஈடுபட்டவர். கடந்த சில மாதங்களாக நோயிற்று சிகிச்சை பெற்று வந்தவர் இவர் ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்துள்ளார். இவரது பூதவுடல் தகனக் கிரியை இன்று மாவத்தகமயில் நடைபெறும். இதில் அரசியல் பிரமுகர்கள்  சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேரரின் இன்று தகனக் கிரியைகளின் சிங்கள மக்களுடன் முஸ்லிம், தமிழ்  மக்களும் சேர்ந்து கடைகளை அடைத்து அனுதாபம் தெரிவிக்கவுள்ளனர்.

இக்பால் அலி



No comments

Powered by Blogger.