Header Ads



நாங்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் - சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டமொன்றை நடாத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து தாமும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்த அரசியல் கைதிகளையும் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.