2 பாஸ்போர்ட் குறித்து, விமல் வீரவன்ச தரப்பின் விளக்கம்
விமல் வீரவன்சவின் ஆவணங்களில் நகல் எது பிரதி எது என ஏற்பட்ட குழப்ப சூழ்நிலையால் இடம்பெற்ற தவர் அவர் கைதுக்கு காரணம் என வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
செல்லுபடியற்ற கடவுச்சீட்டின் மூலம் இத்தாலிக்கு செல்ல முற்பட்ட வேளை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்காண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் விமரல் வீரவன்சவிற்கு கடந்த காலங்களில் காணப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, பாதுகாப்பு கருதி அவரது முக்கிய ஆவணங்கள் வெவ்வேறான இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக அவரது வீடு, அலுவலகம் மற்றும் நண்பர்களின் வீடுகள் என பல இடங்களில் அவரின் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அவருடைய ஆவணங்களில் நகல் எது பிரதி எது என ஏற்பட்ட குழப்ப சூழ்நிலையால் இடம்பெற்ற தவறு அது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Very good justification...... what to say ?
ReplyDeleteஇந்தவிடயத்தை ஒரு சாதாரன மனிதன் செய்திருந்தால் நேரா ஜெயில்கூடம்தான்
ReplyDeleteஇப்படித்தான் இவர் பார்மன்டிலும் அசல் எது நகல் எது என்று தெரியாமல் பேசுகிறாரோ?அப்போ இதன் பின் இவர் பேசும் எதையும் கணக்கில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ReplyDeleteபாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஒரு சமாதான நீதவான் அந்தஸ்தும் இருக்கிறது இவ்வாறானவர்கள் எதையும் முன்கூட்டி பார்க்காமல் வாசித்து பார்க்காமல் கையோப்பமிடுவதில்லை.அதையும் விட பெரிய விடயம் தனது கடவுச்சீட்டு இதுகூட தெரியவில்லை என்றால் இவரின் புத்து கோளாறா அல்லது மறவர்களை ஏமாற்றுகிறாரா?இவர் நினைத்துக்கொண்டார் எல்லோரும் நம்மை போன்று தேங்கா மடையர்கள்தான் அதனால் ஏமாற்ற முடியும் என்று விமான நியைய ஊழியர்களை பாராட்ட வேண்டும்.ஏன் என்றால் வெளி நாடு சென்ற பின் அந்த நாட்டில் வைத்து கள்ள பாஸ்போர்ட் பிடிபட்டால் நாட்டின் மானம் காத்தில் பறந்து இருக்கும்.
ReplyDeleteசரியாக சொனீர்கள் mustafa jawfer .
ReplyDeleteமுன்னையவரின் வித்தை வானரமாக இருந்த பழக்கதோஷத்தில் பாவம், நல்லாட்சியை மறந்து எதைக்கொண்டு போனாலும் அனுமதி கிடைக்கும் என்று நினைத்துச் சென்றிருப்பார்.
ReplyDeleteபழைய ஆட்சியில் என்றால் பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக இவர் தனது கைக்குட்டையைக் காண்பித்திருந்தாலும் விமானமேற்றி டாட்டா காண்பித்து அனுப்பியிருப்பார்கள் அதிகாரிகள் .