Header Ads



புத்தளத்திலும், எம்பிலிபிடியிலும் சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு

இரண்டு பிரதேசங்களில் இரண்டு சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு கடத்தல் சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

சிறுமியை தேடி கண்டு பிடித்த பின்னர் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்த பின்னர் சிறுமி வைத்திய சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் தற்போதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

எம்பிலிபிடிய பிரதேசத்தில் வைத்தே இச்சம்பவம் இ்டம்பெற்றள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அவரைக் கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவி ஒருவர் தனமல்வில பகுதியில் அனாதரவாக இருப்பதாக நேற்று பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதன்படி அங்கு சென்ற பொலிஸார் மாணவியை மீட்டு வாக்குமூலத்தை பதிவு செய்தபோது, தான் வாசிகசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை சிலரால் கடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

இதன்போது மாணவி நினைவிழந்தமையால் அவரை கடத்திச் சென்றவர்கள் தணமல்வில - உணாடுவெவ பிரதேசத்தில் விட்டுச் சென்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு தணமல்வில மற்றும் பணாமுர பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.