Header Ads



தேசியப் பட்டியல் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்

தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் முறைகேடான முறையில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து டியூ குணசேகர தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டியூ குணசேகர, உச்சநீதிமன்றத்தில் அடிப்படைஉரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலில் தோல்வியுற்றவர்கள் தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை முறைகேடானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே குறித்த நியமனங்களை ரத்துச் செய்யவும், எதிர்வரும் காலங்களில் தேர்தலில் தோல்வியுற்றவர்களை தேசியப் பட்டியல் ஊடாக நியமிப்பதற்கு தடைவிதிக்குமாறும் உச்சநீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இது தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த மனுவை விசாரிப்பதா இல்லையா என்பதை பிரதம நீதியசர் உள்ளிட்ட குழு முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான நீதிபதிகள் இன்று டியூ குணசேகரவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் அங்கீகரித்துள்ள நிலையில், அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு கிடையாது என்றும் அவர்கள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்

No comments

Powered by Blogger.