மாலைதீவு ஜனாதிபதி மீது, கொலை முயற்சியா? விசாரணை குழுவில் இலங்கையும்
மாலைதீவு ஜனாதிபதி அப்துல் கையூம் பயணித்த அதிவேக படகு வெடித்த சம்பவம் குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்க இராணுவ புலனாய்வு பிரிவு, சஊதி அரேபியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இணைந்து விசாரணையை முன்னெடுக்கும் குழுவில் இலங்கையும் அங்கம் வகிக்கின்றது.
இவ்விபத்து படகின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர், இது ஒரு குண்டுத்தாக்குதல் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டதை அடுத்தே இவ்விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment