ரணில்- மைத்திரி மீது விசுவாசம் வைத்திருப்பவர்கள் மோசடிகளில் இருந்து விடுதலை பெறுகின்றனர் - அனுரகுமார
அடுத்த பாராளுமன்ற அமர்வில் மற்றுமொரு பாரிய மோசடி குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தப்போவதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
அரசாங்கம் ஜனவரி 8 ம் திகதி வழங்கப்பட்ட மக்கள் ஆணையின் படி செயற்படவேண்டும்,ஆனால் அவர்கள் அதற்கு எதிராக செயற்படுகின்றார்கள் போல தோன்றுகின்றது,இந்த விடயங்கள் மக்களை அவர்களது உரிமைகளிற்காக ஐக்கியப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றது.
முன்னைய அரசாங்கத்தின் திருடர்கள் இந்த அரசாங்கத்திற்குள் ஆழமாக ஊருடுவியுள்ளார்கள், சில திருடர்கள் அறைகளில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள், ஏனையவர்கள் விராந்தையில் அரட்டையடித்தபடி உள்ளனர். ஓரு குழுவினருக்கு எதிராக விசாரணை நடைபெறுகின்றது, ஏனைய விசாரணைகள் மூடி மறைக்கப்படுகின்றன, மோசடிகளில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்கள் எங்களிடமுள்ளன.
அடுத்த பாராளுமன்ற அமர்வில் இன்னொரு பாரிய மோசடி குறித்த விபரங்களை அம்பலப்படுத்தவுள்ளோம், சுசில்பிரேமஜயந்த, அனுரபிரிய தர்சன யாப்பா, உட்பட பலரிற்கு எதிராக விசாரணைகள் இடம்பெறவில்லை.
முன்னைய அரசாங்கத்தில் தேசப்பற்று என்பது மகிந்தராஜபக்ச மீதான விசுவாசத்தை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்பட்டது, அவரிற்கு விசுவாசமாக இருந்தவர்கள் தேசப்பற்றுள்ளவர்கள் என கருதப்பட்டனர்.
இதேபோன்று ரணில்- மைத்திரி மீதான விசுவாசம் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதா அல்லது விடுவிப்பதா என்பதை தீர்மானிக்க கூடாது,
ஆனால் தற்போது விசுவாசிகள் விடுவிக்கப்படுகின்றனர், விசுவாசமற்றவர்கள் விசாரிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment