Header Ads



பெற்ற தாயை கொன்று, நெஞ்சைக் கிழித்து, இதயத்தைக் கையில் எடுத்த கொடூர மகன்


அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது தாயை கொடூரமாகக் கொன்று இதயத்தை கைகளாலேயே வெளியே எடுத்த வெறிச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் பிரிமொன்ட் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான ஓமர் பெட்டிஜென். இவரது தாயார் நைலா பெட்டிஜென். 64 வயதான இவர் கணவரை பிரிந்து தனது ஒரே மகனுடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று நைலாவுக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஓமர் முரட்டுத்தனமாக நடக்கவே துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார் நைலா. இதனால் கோபமடைந்த ஒமர், துப்பாக்கியை ஒரு சுத்தியலால் தட்டி கீழே தள்ளினார். பின்னர் தனது தாயாரைத் தாக்கி, இன்னொரு துப்பாக்கியை எடுத்து தாயாரை 4 முறை சுட்டார். இதில் பரிதாபமாக உயிரிழந்தார் நைலா.

அதன் பின்னர் கத்தியை எடுத்து தனது தாயாரின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் மார்புப் பகுதி வரை உடலைக் கிழித்த அந்த இளைஞர் இதயத்தை கையால் எடுத்து வெளியில் போட்டுள்ளார். தனது மகனிடமிருந்து அழைப்பு எதுவும் வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை போலீஸாருக்குப் தகவல் கொடுத்தார். போலீஸார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நடந்த கொடூரம் பற்றி தெரிய வந்தது.

இதையடுத்து ஒமர் கைது செய்யப்பட்டார். நைலா 7 முறை சுடப்பட்டுள்ளதாகவும், அவரது உடலை அறுத்து கொடூரமாக நடந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட ஒமர் போலீஸாரிடம் கூறுகையில் எனது தாயார் முழங்கால் மற்றும் இடுப்பு பிரச்னை தொடர்பாக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டனர். அதன் பின்னர் அவர் மாத்திரைக்கு அடிமையாகி விட்டார். இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்து விட்டது. இதுதொடர்பாக அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.