Header Ads



"முஸ்லிம் பிரதேசங்களில், ஒருநாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதன் மூலம்..."

-Inamullah Masihudeen-

வடகிழக்கு முஸ்லிம்களது விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவென நேற்றுமாலை அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தலைமையகத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

தேசிய ஷூரா சபை நிபுணத்துவ ஆலோசனைகளுடன் கூடிய இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்பாடு செய்யவிருந்த சந்தர்ப்பத்திலேயே மேற்படி கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும், அதேவேளை நேற்று மாலை கலாநிதி ஹஸ்புல்லாஹ் தலைமையில் மேகொள்ளப்பட்ட வில்பத்து விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தேசிய ஷூரா சபை ஆராய்ந்தது.

இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் பதிக்கப்பட்ட வடகிழக்கு முஸ்லிம்களது விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை வென்றெடுக்க அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா போதிய அழுத்தங்களை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறான ஒரு ஆணைக்குழுவினை அரசுடன் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் பெற்றுத்தர தவறின் வடகிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் நவம்பர் மாதமளவில் ஒருநாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதன் மூலம் அரசின்மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க சிவில் சமூகதலைமைகள் முன்வருதல் வேண்டும்!

No comments

Powered by Blogger.