Header Ads



இராக் விவகாரத்தில் மன்னிப்பு கோரும் டொனி பிளயர், சதாமை அகற்றியதற்காக மன்னிப்பு கோருவது கடினம் என்கிறார்

இராக் விவகாரத்தில் விட்ட தவறுகளுக்காக மன்னிப்பு கோரிய பிரிட்டனின் முன்னாள் பிரதமாரான டொனி பிளயர், இராக் போரே இஸ்லாமிய அரசின் உதயத்துக்கு காரணம் என்ற கூற்றில் உண்மையும் இருப்பதாக கூறியுள்ளார்.

சதாம் ஹுசைனை அகற்றிய தமக்கும் இன்றைய இராக் நிலைமையில் பொறுப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சிஎன்என் ஒளிபரப்பாளர்களுக்கு செவ்வி வழங்கிய பிளயர், 12 வருடங்களுக்கு முன்னதாக இராக் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் தாம் இணைந்ததில் எந்த விதமான தவறும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், சதாமை பதவியில் இருந்து அகற்றியதற்காக மன்னிப்பு கோருவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. கண்கெட்ட பின் சூரிய நமஸ்க்காரமோ...................

    ReplyDelete

Powered by Blogger.