Header Ads



அக்கரைபற்று, காத்தான்குடி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நாம் ஈமான் கொண்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் விபச்சாரம்,கள்ளத்தொடர்பு என்பவற்றுக்கு எதிராக இன்று 02 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் முஸ்லிம்களை பௌத்தரிடம் காட்டிக் கொடுக்காதே,முஸ்லிம் -சிங்கள உறவை சீர் குழைக்காதே,இஸ்லாத்தை கேவலப்படுத்தாதே,போலி அரசியல் செய்யாதே,குடும்பப் பெண்களை விபச்சாரிகள் ஆக்காதே,போலி அரசியல் செய்யாதே,குடும்பப் பெண்களை விபச்சாரிகள் ஆக்காதே போன்ற பல்வேறு தமிழ் ,சிங்கள,ஆங்கில மொழியிலான பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள்,இளைஞர்கள், பொது மக்கள் , நாம் ஈமான் கொண்டோர் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

2

அக்கரைப்பற்றில் விபச்சாரத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் பொலிசார் தடுப்பு: இளைஞர்கள் முறுகல்

அக்கரைப்பற்றில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் ஏற்பாடு செய்யப்பட்ட விபச்சாரம்  - கள்ளத்தொடர்பு என்பவற்றிக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் பெலிசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று ஜூம்ஆ பள்ளிவாசலின் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை தடுக்க 20க்கு மேற்பட்ட பொலிசார் பள்ளிவாசல் பிரதேசத்தில் தடிகளுடன் குவிக்கப்பட்டிருந்தனர்.

கண்டன ஆரப்பாட்ட இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிடாமல் தடுத்ததுடன் இளைஞர்களை உடன் கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டார்

மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் 14 நாட்களுக்கு எவ்வித காரணங்களுமின்றி சிறைக்கு அனுப்பப்படுவார்களட என பொலிசார் அச்சுறுத்தலும்; விடுத்தனர்.

இதனை இளைஞர்கள் ஏற்க மறுத்ததினால் பொலிசாருக்கும் இப்பிரதேச மக்களுக்குமிடைய சிறிய முறுகல் நிலை தோற்றம் பெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டமானது விபச்சாரம் - கள்ளத் தொடர்பு கலாச்சார விழிப்புணர்வு என்பவை தொடர்பாகவே நடத்தப்படவிருந்தன. 

எனினும் இதனை அறிந்த சில உயர் அரசியல் அதிகாரம்படைத்தவர்களின் அழுத்தங்களினால் இக்கண்டன ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் ஈமான் கொண்டோர் அமைப்பு கிழக்கு பூராகவும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. Need muslim vote and support ? Behave or get out. Excellent show to kuppadi politicians. Thank you all for organizing this.

    ReplyDelete

Powered by Blogger.