Header Ads



IS தீவிரவாத இயக்கத்தின் மீது ரஷ்யா தாக்குதல் - சிங்கள ராவயவும் ஆதரவு

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா எடுத்துள்ள தீர்மானத்தை இலங்கையின் சிங்கள ராவய அமைப்பு வரவேற்றுள்ளது.
சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது விமான தாக்குதல் நடத்துவது என ரஷ்ய ஜனாதிபதி விளடீமீர் புட்டின் தீர்மானித்தார்.

ரஷ்ய ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை ஆதரவு தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பு இன்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் மகஜர் ஒன்றை கையளித்தது.

இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், ரஷ்யாவின் செயற்பாட்டுக்கு இலங்கையும் ஆதரவளிக்க வேண்டும் என கூறினார்.


No comments

Powered by Blogger.