Header Ads



"வடக்கில் மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கு, பாதுகாப்பு மிகமுக்கியமானது"

 M.Jawfer. jp.-

கடந்த இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் வடமாகான முஸ்லிம்கள் பாசிச புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு தற்போது அகதி அந்தஸ்தோடு வாழும் சகோதர முஸ்லிம்களை நாட்டில் சமாதானம்  என்று ஒன்று உருவாகி இருக்கும் இச்சந்தர்ப்பத்திலும் தனது சொந்த பூமியில் குடியேற விடக்கூடாது என்ற நோக்கோடு இரவு பகலாக சிந்திக்கும் மற்றுமொரு இனமான தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லும் சில அரசியல்வாதிகள் இன்னும் அவர்களிடத்தில் இருக்கும் இன வெறியை தன் உள்ளத்தில் இருந்து களையவில்லை என்பதுமட்டும் உண்மை. 

 வடக்கில் சிங்கள மக்களும் குடியேறக்கூடாது முஸ்லிம்களும் குடியேறக்கூடாது என்று கூறும் இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டியுள்ளது. கணிசமான அளவு ஏனைய இரண்டு இனமும் குடியேறினால் நம்முடைய எதிர்கால இலச்சியத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று இவர்கள் சிந்திக்கிறார்கள்.

 இங்கு நாம் பல விடயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மற்றும் முன்னாள் பதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போன்றோர்   கூறுகின்றார்கள்  புலிகள் முழுமையாக அழிக்கப்படவில்லை அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிநாடுகளில் நடக்கிறது ஆகவே புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பது அவர்களின்  கருத்து.

அதே போன்று அமரிக்காவின் கருத்தும் அதுவாகவே உள்ளது. அண்மையில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு வந்தகையோடு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அவர்கள் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகள் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை அவர்களின் தாக்கம் இன்னும் வெளிநாடுகளில் உள்ளது என்றார்.

இதுவல்லாம் இவ்வாறு இருக்க நம்மவர்கள் வடக்கில் குடியேறும் விடயங்கள் பற்றி மட்டும் பேசுவதில் பல விடயங்களை சிந்திக்க வேண்டும். அங்கு குடியேற வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லாவிட்டாலும்,எதிர்காலத்தில் எதோ ஒருவகையில் வடக்கில் மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகினால் அங்குள்ளவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்.அதுவல்லாம் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அதிகமான தமிழ் மக்களின் உள்ளத்தில் தமிழ் ஈழம்தான் முடிவு என்ற கோரிக்கையில் இருப்பது நன்றாக தெரிகின்றது. அவ்வாறான பிரச்சினை எதிர்காலத்தில்  வருமாக இருந்தால் வெளியேறுங்கள் என்று சொல்லுவதும் சந்தேகம்தான் ஏன் நாங்கள் முன்கூட்டியே உங்களை வரவேண்டாம் என்று சொன்னோம் ஏன் வந்தீர்கள் என்றுகூட சொல்லலாம்.

 யுத்தம் முடிந்து விட்டது என்று சொல்லும் அரசும் சந்தேகப்படுகின்றது என்றால் ஏன் நாம் சந்தேகிக்க கூடாது? அகவே குடியேறும் முஸ்லிம்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட உறுதியளிக்கப்பட  வேண்டும். பெரும்பான்மையின மக்களும் தங்களின் இடங்களுக்கு குடியமர்த்தப்பட வேண்டும் அப்போதுதான் முஸ்லிம்களின் பாதுகாப்பை நம்பிக்கையோடு எடுத்துச்செல்ல வழிகிடைக்கும். 

No comments

Powered by Blogger.