SLMC வாக்குகள் அதிகரிப்பு, வெற்றிக்கு எமது உழைப்பு, முபாரக் மௌலவியின் பிரார்த்தனை காரணம் - ஹரீஸ்
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக அம்மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஹரீஸ் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது
கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமுடைய அரசியல் சாணாக்கியத்தினாலும், எமது கடும் உழைப்பினாலும் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சியின் வாக்கு வங்கியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டோம்.
இருந்தபோதும் வன்னி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எம்மால் பாராளுமன்ற உறுப்பினர்களை பெறமுடியாமல் போய்விட்டது. எனினும் கட்சியின் தலைவர் ஹக்கீம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மயில் கட்சிக்கு எமது கட்சியின் வாக்குகளை உடைக்க முடியவில்லை. அக்கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள் அதாவுல்லாவின் வாக்குகளாகும். எதிர்காலத்தில் றிசாத் பதியுதீனோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரசோ எமக்கு சவாலாக அமையுமா என்பது குறித்து தற்போதைக்கு என்னால் எதுவுமே சொல்லமுடியாது.
தயாகமகே மற்றும் சில தமிழ் கடும்போக்காளர்களையும் எதிர்கொள்ள ஹரீசுக்கு போதிய அதிகாரங்களுடன் அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமென, இந்தப்பிரதேச மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுமக்களின் விருப்பமாகும். இதனால் தமது பிரதேசத்திற்கு பாதுகாப்பும் அபிவிருத்தியும் கிட்டுமென மக்கள் நம்புகிறார்கள் .

தேசியப் பட்டியல் யாருக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கலந்துரையாடல் கட்சிக்குள் தொடராக நடைபெற்று வருகிறது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் ஹரீஸ் தெரிவித்தார்.
அதேவேளை உங்கள் வெற்றிக்கு, முபாரக் மௌலவி காரணமென அவர் குறிப்பிட்டுள்ளாரே என வினவியபோது முபாரக் மௌலவியின் பிரார்த்தனையும், எனது உழைப்புமே வெற்றிக்கு காரணமெனவும் ஹரீஸ் தெரிவித்தார்.
அதேவேளை உங்கள் வெற்றிக்கு, முபாரக் மௌலவி காரணமென அவர் குறிப்பிட்டுள்ளாரே என வினவியபோது முபாரக் மௌலவியின் பிரார்த்தனையும், எனது உழைப்புமே வெற்றிக்கு காரணமெனவும் ஹரீஸ் தெரிவித்தார்.
I think he started to fight to minister post
ReplyDeleteபொதுமக்களின் துஆ இல்லையோ?
ReplyDeleteAllah than karanam enru sola vai varathey puthlam makal baisuku mahindavoku vote pods sons muba sirkana duwa imana wash panu mamu
ReplyDeleteELLATHIKKUM ALLAHVIN KIRUPAITHAN ALHAMDULILLAH
ReplyDelete