Header Ads



பேஸ்புக் செயற்பாட்டாளர்களுக்கு, மகிந்த தேசப்பிரிய நன்றி தெரிவிப்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேஸ்புக் செயற்பாட்டாளர்கள் மேற்கொண்ட அரசியல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நன்றி தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் செயற்பாட்டாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வமான பங்களிப்பு காரணமாக நீதியானதும், நேர்மையானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்ததாக அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் தேர்தல் ஆணையாளரின் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் தேர்தல்களிலும் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலொன்றை நடத்துவதற்கு பேஸ்புக் செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. உங்களைப்போல் நேர்மையான அதிகாரிகள் இந்த நாட்டுக்கு கட்டாயம் தேவை.கிட்லர் ஆட்சி செய்த மஹிந்தைக்கு பயப்படாத வீரமகன் நீங்கள் இந்த நாட்டு மக்கள் என்றும் உங்களை மறவாது.கோடானுகோடி நன்றிகள் தேக ஆரோக்கியம் பெற்று நீடூழிகாலம் வாழ வாத்துகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.