Header Ads



புதிய அரசாங்கத்தை, வாழ்த்தும் கோத்தபாய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துகொள்வதாகவும், புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்வதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் கோத்தபாய தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை போன்றே தோல்வியையும் ஏற்று கொள்ளும் அவர், நாட்டை நேசிக்கின்ற தலைவராக பலர் மனங்களில் இருக்கின்றார்.

அத்துடன் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, நாட்டினுள் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு எங்கள் ஆதரவை வழங்குவோம் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

4 comments:

  1. வேறு வழி..?

    அதெல்லாம் இருக்கட்டும் உங்கள் வெள்ளை வேன்களுக்கெல்லாம் ஆண்டு வரியெல்லாம் ஒழுங்ககாகக் கட்டிவிட்டீர்களா மிஸ்டர். கோத்தா?

    ReplyDelete
  2. உங்களின் ஆதரவு புதிய அரசாங்கத்துக்கு தேவை இலை.நீங்கள் செய்த களவுகள் ஆள் கடத்தல்கள் எல்லாவற்றுக்கும் கூடிய கெதியில் விசாரணை உண்டு.பிரதமர் ரணில் அவர்கள்,தேர்தல் காலங்களில் சொன்ன வாக்குறிதிகளில் ஒன்றுதான் வெள்ளை வேன் விசாரணை அந்த அடிப்படையில் வாசிம் தாஜுதீன் கொலை வழக்கு,ஹிருநிகாவின் தந்தையின் கொலை வழக்கு மற்றும் ஊடகத்துறையை சேர்ந்தவர்களின் கடத்தல் கொலை போன்ற வழக்குகளை விஷேச நீதிமன்ற அமர்வுகளை ஏற்பாடு செய்து கூடிய விரைவில் வழக்கை விசாரித்து முடித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.அதை விடுத்து அடுத்த தேர்தல் வரும்வரை வழக்கை இழுத்தடிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. I like your comments dear

    ReplyDelete
  4. எப்ப. வெளிநாடு போகப் போறீங்க ஸார்......???????:

    ReplyDelete

Powered by Blogger.