மஹிந்தவுக்கு நெத்தியடி, 40 பேர் பல்டிக்கு தயார்...?
மஹிந்த அணியில் இருந்து கொண்டு அவருக்காக வக்காளத்து வாங்கி வெற்றி பெற்றவர்களில் தற்போது 40 பேருக்கும் மேற்படட்ட உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் வந்து அமர்ந்து கொள்ளும் முயற்ச்சியில் தற்போது இறங்கி இருக்கின்றார்கள் என்று எமக்கு நம்பகமாகத் தெரிய வருகின்றது.
இவர்கள் தாம் தேர்தல் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணிலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தற்போது அவர்களுடன் நேரடியாக தெடர்ப்பில் இருக்கின்றார்கள். இன்னும் சிலர் தரகர்கள் ஊடாக தூது அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படிக் கட்சி தாவுகின்றவர்கள் விடயத்தில் சிலரை எப்படியும் உள்வாங்குவது இல்லை என்று ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானங்களை எடுத்து இருக்கின்றார்கள். ஏனையோர் வருவதில் ஆட்சேபனைகள் தெரிவிப்பதில்லை என்றும் உடன்பாடு காணப்பட்டிருக்கின்றது. என்றாலும் வருகின்றவர்களுக்கு பதவிகளுக்கு இடமிருக்காது என்று தெரிகின்றது.
அப்படி இருந்தாலும் சிலருக்கு பதவி கொடுத்துக் கௌரவிக்க வேண்டியும் இருக்கின்றது. திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிலரை தேசியப் பட்டியலில் உள்வாங்குவதற்கு இடமிருக்கின்றது. இதில் எஸ்.பி.யின் பெயர் முன்னணியில் இருக்கின்றது என்று தெரிகின்றது.

Unp shouldn't date anyone now . These 40 can be thieves and opportunist. So don't give them chance.
ReplyDeleteWhen people voted for beetle leaf how can they betray the people ? So let them stay in same party which they got elected.
Absolutely correct
ReplyDelete