Header Ads



நாம் கண்ணைத் திறந்து, பார்த்துக்கொண்டிருக்கின்றோம் - சோபித்த தேரர்


தேர்தலின் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பில் நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தெளிவூட்டியது.

இதன்போது, நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தை ஒரு வருடத்திற்கு குத்தகைக்கு வழங்கி, மறுபக்கம் பார்த்துக்கொண்டிருக்க இம்முறை நாம் தயாரில்லை. இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு, சிரமத்திற்குள்ளாகிய நாம் அனைவரும் நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதனை, கண்ணைத் திறந்து பார்த்துக்கொண்டிருக்கின்றோம். 

மிகவும் சிறந்த அமைச்சரவை ஒன்றை ஸ்தாபிக்குமாறு நாம் அரசாங்கத்திற்கு நினைவூட்டுகின்றோம். அந்த அமைச்சர்களே நாட்டை ஆட்சி செய்யவுள்ளனர். குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளவர்களை நியமிக்க வேண்டாம். ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களை புதிய அமைச்சரவைக்காக நியமியுங்கள். அதைவிட மிக முக்கியமானவர்கள் அமைச்சின் செயலாளர்கள். அவர்களை நியமிக்கும் போது, திறமையானவர்களை நியமிக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். திறமையானவர்கள் இல்லாவிடின், ஓய்வு பெற்ற திறமையாளர்களையாவது நியமியுங்கள்.

1 comment:

Powered by Blogger.