விபத்தில் வபாத்தானவர்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்
இன்று புளிச்சாக்குளம் பகுதியில் இடம் பெற்ற முச்சக்கரவண்டி-லொறி விபத்தில் மரணமான ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜனாஸா நல்லடக்கம் புத்தளம் மன்னார் வீதி வேப்பமடு நிவ்சிட்னி முகாம் மையவாடியில் இரவு இடம்பெற்றது.
விமான நிலையத்துக்கு சென்று தமது கணவரை வழியனுப்பிவிட்டு வந்த மனைவி உட்பட அவரது இரட்டை குழந்தை மற்றும் உறவுக்கார பெண்ணொருவர் ஆகியோர் புத்தளம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி புளிச்சாக்குளம் பகுதியில் காலை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஜவரில் சாரதி உள்ளிட 55 வயது நிரம்பிய பெண்னொருவரும், 8 மாதக் குழந்தையொன்றும் ஸ்தலத்தில் வபாத்தானது.அதே வேளை குழந்தையின் தாய் மற்றும் மற்றுமொரு குழந்தை சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக முந்தல் பொலீஸார் தெரிவித்தனர்.
மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமானதாக பொலீஸார் தெரிவித்தனர்.

Post a Comment