மூடிய அறைக்குள் மைத்திரியிடம், ரணில் எழுப்பிய கேள்வி..!
19 வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை கூறுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.
நேற்று இரவு இருவருக்கும் இடையில் மூடிய அறைக்குள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அமைச்சரவை கூட்டத்தின் பின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்றத்தில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல் அமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ரணில் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் பேசி தற்போதைய பிரச்சினைக்கு தீர்வை காண முயல்வதாக உறுதியளித்துள்ளார்.
இந்தநிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் 19வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை.

Post a Comment