Header Ads



19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கை உயர்த்துபவர்கள் தேசத்துரோகிகள் - ரோசி சேனாநாயக்க

19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் தேசத்துரோகிகள் என அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

திருத்தச் சட்டத்திற்கு எதிராக கை உயர்த்தும் உறுப்பினர்கள் தேசத்துரோகிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது இவ்வாறான தேசத்துரோகிகளுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு போசனை பதார்த்தங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் கால்வாசிப் பேர் வறுமையினால் வாடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக விரோத செயற்பாடுகளும் ஊழல் மோசடிகளும் இடம்பெற்ற காலத்திலேயே புதிய அரசாங்கம் 100 நாள் திட்டத்தை அறிமுகம் செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

18ம் திருத்தச் சட்டம் ஒருவருக்கு அதிகாரத்தை மையப்படுத்தியதாகவே காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.