Header Ads



விட்டுக் கொடுக்காத ரணில், மைத்திரிக்கு இக்கட்டான நிலை, கடுமையான ரத்தன தேரர், பாராளுமன்றத்தில் அனல் பறக்கிறது

-நஜீப் பின் கபூர்-

எமக்குப் பாராளுமன்றத்திலிருந்தி கிடைத்த மிகப் பிந்திய தகவல்படி, (இலங்கை நேரம் பி.ப 5 மணி) 19 விடயத்தில் ரணில் தனது நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காததால் இது வரை எந்தத் தீர்மானத்திற்குக் வர முடியாதிருக்கின்றது என்று தெரிகின்றது.

அதே நேரம் இன்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வாசு-வீரவன்ச ஆகியோர்களுடன் கடுமையாக அதுருலியே ரத்தன தேரர் மோதி இருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் இக்கட்டான நிலையில் இறுதிப் பேச்சுவார்த்தையொன்றில் தற்போது ஈடுபட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

அதற்கு முன்னர் சுதந்திரக் கட்சித் பாராளுமன்ற  உறுப்பினர்கள் கூட்டத்தை மைத்திரி நடத்திய போது அங்கும் கடுமையான கருத்து முரண்பாடுகள் தோன்றி இருக்கின்றது. வாக்கெடுப்பு தற்போது இரவு 7 மணிக்கு என்று தெரியவருகின்றது.

No comments

Powered by Blogger.