Header Ads



தலையை மாற்றும் சத்திர சிகிச்சை - மருத்துவ உலகின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பும், எச்சரிக்கையும்..!

தலைமாற்று சத்திர சிகிச்சையென்பது மருத்துவ உலகின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

ஒருவரது தலையை மற்றொருவர் உடலில் பொருத்துவது என்பது  அவ்வளவு இலகுவான காரியமல்ல. இதற்கான ஆய்வுகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.

மருத்துவ துறைக்கு இன்றளவும் சவால் விடும் சத்திரசிகிச்சையாக இது உள்ளது.

இந்தக் கனவை நனவாக்க தன்னால் முடியுமென இத்தாலி நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

செர்ஜியோ கனாவெரோ என்ற அம் மருத்துவர், மனிதர்களுக்குத் தலை மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் 1970-ஆம் ஆண்டிலேயே, அமெரிக்க விஞ்ஞானிகள் குரங்கு ஒன்றின் தலையை மற்றொரு குரங்கின் உடலில் பொருத்தினர்.

இதனை நட த்திய தலைமை வைத்திய அதிகாரி மருத்துவர் ரொபேர்ட் வைட்.

எனினும், நுணுக்கமான முள்­ளந்­தண்டை இணைக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை.

எனவே, தலைமாற்று சத்திர சிகிச்சைக்குப் பின் அந்தக் குரங்கின் உடல் செயலிழந்தது.

உபகரணங்கள் உதவியுடன் நன்கு சுவாசித்த அந்தக் குரங்கு, ஒன்பது நாள்கள் உயிர் வாழ்ந்தது.

குரங்கின் முள்­ளந்­தண்டை இணைத்திருந்தால், அது நீண்ட நாள்கள் உயிர் வாழ்ந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது தொழில்நுட்பங்கள் நன்கு முன்னேற்றமடைந்துள்ள நிலையில், முள்­ளந்­தண்டையும் இணைப்பது சாத்தியமே என்று இத்தாலிய மருத்துவர் செர்ஜியோ கனாவெரோ கூறியுள்ளார்.

விரைவில் மனிதர்களின் தலையை தன்னால் வெற்றிகரமாக மாற்றிப் பொருத்த முடியும் என அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த சத்திர சிகிச்சைக்கு தம்மை உட்படுத்திக்கொள்ள பலர் முன் வந்தனர்.

அவர்களில் ரஷ்யாவைச் சேர்ந்த வலேரி ஸ்பிரிடோனோவ் என்ற 30 வயது நபர் தலை மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.

இவர் ஒரு கணனிப் பொறியியலாளர், சிகிச்சை ஆபத்தானது என்பதை அறிந்து வைத்துள்ள போதிலும் அதற்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளதாக வலேரி தெரிவித்துள்ளார்.

வலேரி தசைகளை செயலிழக்கச் செய்யும் அரிய வகை நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு அவருக்கு தலை மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மருத்துவத் துறையில் ஒரு மைல்கல்லாக அமையவிருக்கும் இந்த தலை மாற்று அறுவைச்சிகிச்சையை அமெரிக்காவில் மேற்கொள்ள கனாவெரோ திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மூளைச்சாவு அடைந்த உடல் நல்ல நிலையில் உள்ள ஒருவரது உடல் உபயோகிக்கப்படவுள்ளது. அவரது உடலில் வலேரியின் தலை பொருத்தப்படவுள்ளது.

மேலும் சத்திர சிகிச்சையின் போது இரு தலைகளும் ஒரே நேரத்தில் வெட்டி எடுக்கப்படவுள்ளதுடன் வலேரியின் தலை முழு வளர்ச்சியடைந்த உடலில் பொருத்தப்படவுள்ளது.

இதற்காக தன்னிடம் விசேடமாக தயாரிக்கப்பட்ட 'பசையொன்று' உள்ளதாக செர்ஜியோ கனாவெரோ தெரிவித்துள்ளார்.

சுமார் 36 மணி நேரம் நடைபெறவிருக்கும் அந்த அறுவைச் சிகிச்சையில் பங்கேற்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய 150 பேர் கொண்ட குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளதாக கனாவெரோ தெரிவித்துள்ளார்.

எனினும் செர்ஜியோ கனாவெரோவின் முயற்சிக்கு வைத்தியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனோடு எச்சரிக்கையும் செய்துள்ளனர்.

2 comments:

  1. தலையை மாற்றி, கடைசியில் என்ன நடக்கப் போகின்றதோ?

    இந்துக்கள், இதே நுட்பம் எங்களிடம் இருந்தது, அதுதான் கணபதி (பிள்ளயார்) என்று சொல்லி, இந்துமதம் விஞ்ஞான மதம் என்று சொல்லத் தயாராக இருப்பார்கள்.

    ReplyDelete
  2. தலையை மாற்றினால், ஆள் அடையாளம் என்பது என்னாகும்? மனிதன் யாராக இருப்பான், உடலுக்கு உரியவனா, இல்லை தலைக்கு உரியவனா?

    பாவம் புண்ணியம் யார் பெயரில் எழுதப்படும், மறுமையில் எந்த உறுப்புக்கான விசாரணை மேட்கொள்ளபப்டும்?

    தலை மாற்று சிகிச்சை வெற்றியளித்தால், இலங்கையிலும் நிறையப் பேருக்கு இதனை செய்ய வேண்டி இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.