சம்பிக்க ரணவக்க உயரமாக வளர்ந்தாலும், அவருக்கு மூளையில்லை - டிரான் அலஸ்
மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அழித்தது போல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தையும் அழித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு மாகாண வீடமைப்புத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸார் நேற்று சுமார் 2 மணிநேரம் விசாரணைகளை நடத்தினர்.
இந்த விசாரணைகளின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட டிரான் அலஸ், தனக்கு எதிரான குற்றச்சாட்டின் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சம்பிக்க ரணவக்க உயரமாக வளர்ந்தாலும் அவருக்கு மூளையில்லை. அவரது செயற்பாடுகளை நான் நன்கு அறிவேன். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அழித்தது போல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை சம்பிக்க அழிக்க போகிறார் எனவும் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
டிரான் அலஸூக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு சார்பாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆஜராகியிருந்தார்.
சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் திட்டத்தின் மூலம் டிரான் அலஸ் 645 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

That is 109%true.my3 should understand
ReplyDeleteஉங்களுக்கு தலையே இல்லையே ?
ReplyDelete