மகிந்த தோல்வியடையவில்லை, மைத்திரிபால மக்களின் தலைவர் அல்ல - விமல் வீரவன்ஸ (முழு வீடியோ)
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தனது சிகப்பு சட்டையை விற்றுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் அவருக்கு சொந்தமில்லாத பிரதமர் பதவியை அவர் அனுபவித்து வருகிறார் எனவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச என்பது பெயரல்ல எனவும், அது நாடு எனவும், மகிந்த ராஜபக்ச தோல்வியடையவில்லை எனவும் மகிந்தவே மக்கள் தலைவர், மைத்ரி மக்களின் தலைவர் அல்ல எனவும் வீரவன்ஸ மேலும் கூறியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=x0z3DYeEkCM#t=9631
https://www.youtube.com/watch?v=x0z3DYeEkCM#t=9631
.jpg)



Need mental treatment for him
ReplyDeleteதிரு. வீரவன்ச அண்ணே,
ReplyDeleteநீங்கள் ஜேவிபியிலிருந்து விலகி தனியாக வாக்கு வங்கியில்லாத ஒரு கட்சியமைத்து மகிந்தருடன் ஒட்டிக்கொண்டதிலிருந்து இன்றுவரை மக்கள் அவதானித்தே வருகின்றனர்.
மகிந்தர் இரண்டு முறை பதவி வகித்து முடிந்ததும், உங்களுக்கு ஜனாதிபதி வேட்பாளராகும் நப்பாசை தோன்றியது. அந்தக் கனவில் மிதந்தபடி நீங்கள் அவருக்காக உண்ணாவிரத நாடகமெல்லாம் ஆடி அவர் மனதை 'டச்' செய்யதீர்கள். ஆயினும் 18ம் திருத்தம் கொண்டு வந்து உங்கள் கனவுத் தீயில் தண்ணீரைக் கொட்டினார் அவர்.
அன்றைக்கு உங்களுக்குப் பிடித்த சித்தப் பிரமைதான். இந்த தேர்தல் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்த பின்னராவது குணமாகும் என்று நம்பியிருந்தோம். ஆனால் உங்களுக்கு இன்னும் தெளியவில்லை என்றுதான் தெரிகின்றது.
Excellent jesliya
Deleteவிமல் வீரவன்ஸவை மென்டல் ஆஸ்ப்பத்திரிக்கு கூடிய கெதியில் அனுப்பி குறைந்தது ஒரு வருடமாவது தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்தியம் பார்க்க ஏற்பாட்டைச் செய்யவும்
ReplyDelete