மஹிந்தவிற்கு ஆதரவான கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இன்று நுகேகொடையில் நடத்தப்பட்ட கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையின் ஆணையையும் மீறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர்.
மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.பி ஏக்கநாயக்க, சாலிந்த திஸாநாயக்க, மனுஷ நாணயக்கார, குமார வெல்கம, சி.பி ரட்நாயக்க மற்றும் ஜெயந்த கெட்டேகொட ஆகியோரே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக்கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயில் அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜக்கட்சி. மற்றும் கொம்யூனிசக் கட்சியின் தலைவர்கள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்கவும் இதில் பங்கேற்றார்.



ஊழல் ஆட்சி காரணமாக பதவி பறிபோனவர்களும் இனிமேல் தமது சொந்த ஆதரவை வைத்து பாராளுமன்றத்தை அணுகவே முடியாத கிழநரிகளும் ஒன்றிணைந்து மீண்டும் (வேடிக்கை பார்க்கவரும்) மக்களை ஏமாற்றுவதற்கு முயலுகின்றன.
ReplyDeleteமண் குதிரை நம்பி அற்றில் இறங்கினால் என்னாகும் என்பதை உணராதவர்கள் வேண்டுமானால் இவர்கள் பின்னால் இழுபடலாம். சிந்திக்கத் தெரிந்தவர்கள் நிச்சயம் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
This meeting clearly proves that the people of this country can easily be misled
ReplyDeleteby any donkey if it can only pronounce the word "minority."