Header Ads



மகிந்த ஆதரவு கூட்டத்திற்கு 50.000 மக்கள் - உதய கம்மன்பில

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியை அரசியலில் இருந்து ஒதுங்குமாறு பிவித்துரு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நுகேகொடையில் நடைபெறும் மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேர் வந்தால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அசாத் சாலி சவால் விடுத்திருந்தார். தற்போது அவர் அதனை செய்ய வேண்டும். 

கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  கலந்து கொண்டுள்ளனர். தனது சவாலை இந்த மேடைக்கு வந்து அசாத் சாலி நிறைவேற்ற வேண்டும். 

மகிந்த ஆதரவு கூட்டத்திற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி உள்ளதால், அசாத் சாலி நடைபிணமாக மாறியுள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

6 comments:

  1. இவ்வாறு அசாத் சாலி சொல்லியிருந்தால் அவருக்கு புத்தியில்லை என்றே கூறவேண்டும்.

    ReplyDelete
  2. அசாத் சாலி அவர்களே இதுக்கெல்லாமா சவால் வடுவது ..உடனே பதவியை ராஜினாமா செய்யவும்

    ReplyDelete
  3. Azath is sometimes too much.Too much of anything is good for nothing.Talks of
    mass corruption and so far no action has become a joke ! The entire govt
    machinery and the whole country had been corrupt to the core ever since we got
    our independence and getting rid of the practice is just like that is like, opening the
    Pandora box. The govt is reluctant to catch thieves, why then big mouth talks ?

    ReplyDelete
  4. அசாத் சாலியின் 5,000 கதைக்குப் பிறகு குறைந்தது 10,000 பேராவது அந்த கூடத்துக்கு ஆள் சேர்ந்திருக்கும்... இனவாதம் வளர இவர்களும் ஒரு காரணம்.. நாவை அடக்கினாலே நிறையப் பிரச்சினை தீரும்.. மழை வெள்ளத்தில் நீந்த பாய்ந்தால் தன் சட்டையில்தான் சேறு படும்.... மூக்கும் உடையும்...

    ReplyDelete
  5. அசாத் சாலி அரசியலில் இருந்து ஏன் விலக வேண்டும்...?

    அவர் கூறியது மகிந்தவுக்கு ஆதரவு திரட்டும் அரசியல் கூட்டத்தைதானே..? அவர் கூறியதுபோல மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிப்போம் வாருங்கள் என்று கோரி அரசியல் கூட்டம் நடத்தியிருந்தால் ஆட்களே இருந்திருக்காது.

    'ஆனால் நாடு பிளவுபடுவதை தடுப்போம்' என்று பொய்யைக்கூறி இனவாதத்தைக் கிளப்பும் கூட்டம் கூட்டினால் 'என்னதான் நடக்கின்றது' என்று பார்ப்பதற்கே நிறைய ஆட்கள் வருவார்கள்தானே..?

    பந்தயம் கட்டினால் அழுகுணி ஆட்டம் ஆடாமல் நேர்மையாக ஆடுங்கள்!

    ReplyDelete

Powered by Blogger.