சமகால அரசாங்கத்திலும், மோசமான ஆட்சிக்குரிய அறிகுறிகள் - JVP
சமகால அரசாங்கத்திலும் மோசமான ஆட்சிக்குரிய அறிகுறிகள்
தென்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர்
கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று {18} இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மூலம் அதிகரிப்பதாக பரிந்துரைத்த 5000 ரூபாய் கொடுப்பனவுகள், எதிர்வரும் மார்ச் மாத சம்பளத்துடன் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதேவேளை தனியார் துறைக்கு 2500 ரூபாய் சம்பளம் அதிகரிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 800 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் லால் காந்த வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தொழில் அமைச்சுக்கு மேலும் ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும் எனவும் லால் காந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment