Header Ads



இரத்தம் சிந்தவேண்டி ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பையும் ஹிஸ்புல்லாவே ஏற்றாகவேண்டும் - சுபைர்

(ஏறாவூர் அபூ பயாஸ்) 

இன்ஷாஅல்லாஹ் நாளைக்காலை எமது நாட்டில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது  நேரகாலத்துடன் உங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குகளை போடுமாறு அவரது  சொந்த ஊரான ஏறாவூர் மக்களிடம் வினயமாக பிரதி தவிசாளர் சுபைர் கேட்டுக்கொண்டார்.

வாக்களித்துவிட்டு வீதிகளில் கூடி நின்று மற்றயவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தாமல் வீடுகளுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொண்டதோடு, ஏறாவூரில் வாக்களிப்பு வேளைகளில் ஏதாவது இடையூறுகள் ஏற்படுத்தி எங்கள் ஊர் மக்கள் யாரும் இரத்தம் சிந்தவேண்டி ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவே ஏற்றாகவேண்டும் என்றும் கிழக்குமாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.