யாழ்ப்பாணத்தில் 2015 ஆண்டிற்கான மீலாதுன் நபி விழா
யாழ்ப்பாணத்தில் 2015 ஆண்டிற்கான மீலாதுன் நபி விழா நேற்று மாலை செவலப்பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு யாழ்-கிளிநொச்சி ஜம்மியதுல் உலமா கிளை தலைவர் மௌலவி ஏ.எம் அப்துல்அஸிஸ் (காஸிமி) தலைமை தாங்கியதுடன் மாணவன் எம்.எஸ்.எம் சஸான் கிராஅத் ஓதினார்.
வரவேற்பு உரையை மௌலவி எஸ்.எல் சாமில் மனாரி ஆரம்பித்தார்.தொடர்ந்து தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த சென்னை கைருல் ப்ரிய்யா அரபுக்கலாசாலை முதல்வரும் புனிதப்ப்பாதை மாதச்சஞ்சிகையின் ஆசிரியரும் மூன் தொலைக்காட்சியில் இஸ்லாதம் சம்பந்தமான கேள்விகளுக்கு விடையளிப்பவருமான மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் ஷேகு அப்துல்லா ஜமாலி அவர்கள் உபண்ணியாசம்(பயான்) மேற்கொண்டதுடன் அங்கு பொதுமக்களால் மார்க்கம் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதன் போது இந்நிகழ்வில் மேலும் தலைசிறந்த உலமாக்களான கொழும்பு மஜ்லிஸுல் உலமா சபை துணைச்செயலாளரும் கொழும்பு நஸாஹிய்யா அரபுக்கலாசாலையின் முதல்வருமான மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் எம்.எம்.சிறாஜுதீன் நஜாஹி ஆலிம் அவர்களும்,யாழ்ப்பாணம் முஹியித்தின்
ஜும்மா பள்ளி இமாம் அல்ஹாபிழ் மௌலவி ஏ.எம்.றழிம் மக்கி ஆலிம் அவர்களும் உரையாற்றினர். இதில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment