Header Ads



சிறிலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க, அன்னப்பறவைக்கு வாக்களியுங்கள் - ரணில்

சிறிலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க, அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலவ்வ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கோரினார்.

தற்போது சிறிலங்கா சுதந்திரகட்சி என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, சிறிலங்க சுதந்திர கட்சியை அழித்துவிட்டார்.

அதனால்தான் சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரை எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமித்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியோ, சிறிலங்கா சுதந்திர கட்சியோ எதுமே தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியாது.

ஆனால் சிறந்த அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும். இதன் பொருட்டு சிறிலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டி இருக்கிறது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.