Header Ads



நாளை இரவு 12 மணிக்கு தேர்தல் பிரசாரம் நிறைவு - 9 ஆம் திகதி ஜனாதிபதி யாரென்பது புரியும்


ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் 05-12-2015 நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் 6ம் திகதியுடன் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள், பதாதைகள் உள்ளிட்டவற்றை அகற்றுமாற காவற்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களும் நீக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்­வரும் எட்டாம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சகல ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் தேர்­தலின் இறுதி முடி­வுகள் ஒன்­பதாம் திகதி வெள்ளிக்­கி­ழமை மாலை அறி­விக்­கப்­படும் எனவும் தேர்­தல்கள் செய­லகம் தெரி­வித்­துள்­ளது.

இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுவீடாக விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதும் 90 சதவீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகித்து நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும் தங்களுக்கான வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள், எட்டாம் திகதிக்கு முன்னதாக தங்களின் பிரதேச அஞ்சல் நிலையங்களுக்கு சென்று அதனை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டிருந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுக்கள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளன.

No comments

Powered by Blogger.