Header Ads



ரவூப் ஹக்கீமின் தலைமையில்கீழ் செயற்பட தயாராகவுள்ளேன் - பைசர் முஸ்தபா

  (அப்துல் வாஹிட் குத்துஸ்)

 “ நான் ஜனாதிபதியுடன் மற்றும் கோதாபய ராஜபக்ஷவுடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தேன். அந்த தொடர்புகளிநூடாக கடந்த காலங்களில் சமூகத்திற்கு வந்த பிரச்சினைகளின் போது என்னால் இயன்றவரை முயற்சிகளை செய்து சமூகத்திற்காக உள்ளார்ந்த போராட்டங்களை செய்தேன். கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் பிரச்சினைகள் பேருவலை பிரச்சினைகள் மற்றும் தெஹிவளை பள்ளிவாயில் பிரச்சினைகள் போன்ற எமது சமூக பிரச்சினைகளின் போது ஜனாதிபதியுடனும் கோதாபயவுடனும் தேவையான வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வுகளை பெற முயற்சி செய்தேன். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி சிறந்த தலைமைத்துவம் ஒன்றை தந்தாலும் இந் நாட்டு சமூகங்களை சமமாக மத்தித்து சமூக ஒற்றுமையுடன் நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்வதில் ஜனாதிபதி தவறி விட்டார். அதனால் தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப் பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே, பொது பலசேனா இவ்வரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் அல்லது பொது பல சேனா இவ்வரசாங்கத்தின் பின்னணியில் இயங்குவது உறுதி செய்யப்பட்டால் நான் இந்த அரசில் தொடர்ந்தும் இருக்க மாட்டேன் என்று  துணிந்து சொன்னேன்”. என்று முன்னாள் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார், 

எதிரணிகளின் போது வேட்பாளர் மைத்ரி பால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பதுளைக்கு விஜயம் செய்த முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா  அவர்கள் தனது முன்னால் இணைப்பு செயலாளரும் தற்போதைய மலையக முஸ்லிம் கவுன்சில்-(UCMC ) தலைவருமான ஏ எம் எம் முஸம்மில் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற (UCMC ) நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார். சங்கத்தின் செயலாளர் எம் பி  செய்யத், பிரச்சாரக செயலாளர் எம் எச் எம் ரியாசி, நிர்வாக உறுப்பினர்களான முஸம்மில், மற்றும் எம் பாரிஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்ட மேற்படி கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்துக் கூறிய அவர்   

“ எனக்கு தெரியும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக  அல்லாஹ்விடத்தில் கையேந்தினார்கள், ஹஜ் உம்ராவுக்கு செல்வோர்கள் தனியாக இவ்வரசாங்கத்திற்கு எதிராக கண்ணீர்விட்டு துஆச் செய்தார்கள். தாய்மார்கள் வயோதிபர்கள் சிறுவர்கள் என்று அனைவரும் அல்லாஹ்விடம் கையேந்தினார்கள். அந்த துஆக்களை செவியேற்ற அல்லாஹ் தான் இது போன்றதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்துள்ளான். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நான் மனசாட்சி படி  சிந்தித்து அல்லாஹ்வுக்காக சமூகத்திற்காக தீர்மானம் எடுக்கவில்லை என்றால் நானும் இன்னுமொரு அஸ்வர் ஹாஜியாராகத்தான் வெளிவர வேண்டி ஏற்பட்டிருக்கும்”  என்றும் தெரிவித்தார்.

   இந்த கலந்துரையாடலின் போது, பைசர் முஸ்தபா அவர்களின் முன்னால் செயலாளரும் யூ.சி.எம்.சி தலைவருமான கருத்துக் கூறிய ஏ எம் எம் முஸம்மில் அவர்கள், “ கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு தேவைக்கும் அதிகமான அமைச்சுப் பதவிகள் அந்தஸ்துகள் எல்லாம் இருந்தாலும் அவற்றின் மூலம் எமது சமூகத்திற்கு தேவையான விமோசனம் , பாதுகாப்பு கிடைக்க வில்லை. முக்கியமாக முஸ்லிம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், பிரதிநிதிகள் மத்தியில் ஒவ்வொருவருக்கிடையிலும் கருத்து முரண்பாடு இருந்தது, ஆகவே சமூகம் சார்ந்த விடயங்களில் கருத்தொருமித்து தீர்வுகளை பெற முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது நல்லதொரு சந்தர்ப்பத்தை அல்லாஹ் ஏற்படுத்தி தந்துள்ளான். ஆகவே சமூகத்திற்காக குரல் கொடுக்கும் நீங்கள், ரிஷாத் பதியுத்தீன், ரவுப் ஹகீம் அசாத் ஸாலிஹ் போன்ற தலைமைகள் ஓரணியில் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். 

நாங்கள் கடந்த ஊவா மாகாண சபை தேர்தலில் இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்தே எமகானதொரு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் கொள்ளும் இதய சுத்தியான நோக்கத்தோடு ரிஷாத் பதியுத்தீன் மற்றும் ரவூப் ஹகீம் ஆகிய தலைமைகளை ஒன்று சேர்த்து தேர்தலில் போட்டி இட்டோம். ஆனால் ஊவா முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்தின் மீதிருந்த கோபபத்தின் காரணமாக இவ்வரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை ஏற்றிருந்த எமது முஸ்லிம் தலைமைகளை ஏற்க மறுத்தார்கள். எவ்வாறாயினும் எமது முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை பெறமுடியாமல் போனாலும் முஸ்லிம் தலைமைகளை ஒன்று சேரப்பதில் எமது மலையக முஸ்லிம் கவுன்சில் வெற்றி கண்டது. அதை தொடர்ந்து முன்கொண்டு செல்ல நல்லதொரு சந்தர்ப்பத்தை அல்லாஹ் மீண்டும் ஏற்படுத்தி தந்துள்ளான். ஆகவே நடைபெறுகின்ற இத்தேர்தல் வெற்றிக்கு முஸ்லிம்களின் மிகப் பெரிய பங்களிப்பு ஒரு சக்தியாக சான்று பகர போகின்றது. ஆகவே எமது சமூகத்தின் குரலாக நீங்கள் ஒருமித்து ஓசை எழுப்ப வேண்டும்” என்றும் கருத்துக் கூறினார். 

இதற்கு பதிலுரைத்த பைசர் முஸ்தபா அவர்கள் நிச்சயமாக இனிவரும் காலங்களில் அவ்வாறானதொரு முயற்சி நடுக்குமாயின் நான் எனது பூரண ஒத்துழைப்பை தந்து செயற்பட தயாராக உள்ளேன், மேலும் ரிஷாத்பதியுத்தீன்  அசாத் ஸாலிஹ் போன்றவர்களுடன் சேர்ந்து ரவூப் ஹக்கீமின் தலைமையில் கீழ் செயட்படுவதற்கு கூட நான் தயாராக உள்ளேன் என்றும் கருத்துக் கூறினார்.                            

4 comments:

  1. Good signal welcome and go on

    ReplyDelete
  2. அல்லாஹ் நம் சமுதாய தனைவர்களை உள்ளத்தால் ஒன்றிணைய வைப்பானாக ஆமீன்

    ReplyDelete
  3. wow unbelievable how happy to hear to his word..! Really Allah Is Always Great..! Alhamdulillah.....!

    ReplyDelete

Powered by Blogger.