Header Ads



'முஸ்லிம்களுக்கு எந்த தீங்குக்கும் இடமளிக்கமாட்டோம் என பகிரங்க வேண்டுகோளை முன்வைத்திருக்க முடியும்'

இலங்கையினுடைய முஸ்லிம் அரசியல் வரலாற்றில் ஒரு போதும் இல்லாதளவுக்கு முஸ்லிம்கள் ஒன்றுபட்டு  ஏகமானதாக பொது எதிரணி வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பது இதுவே முதற்தடைவ. இதற்குக் காரணம் பொதுபல சேனா, இராவண பலய போன்ற அமைப்புக்களினால்  மேற்கொள்ளப்பட தீவிரவாத பிரச்சினைகள் முஸ்லிம்களிடையே ஆட்கொண்டிருந்தமையேயாகும். ஹலால், பள்ளி உடைப்பு முதல் அலுத்கமை சம்பவம் வரையிலான பிரச்சினைகளுக்கு எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்ட வில்லை. இவையே ஒவ்வொருவரும் பேசும் பொருளாக உள்ளன என்று அக்குரணை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித் தலைவர் அஜ்மீர் பாரூக் தெரிவித்தார்.

கண்டி கட்டுகஸ் தோட்டை நகரில் பொது எதிரணி வேட்பாளரை அதரித்து கடைகளுக்கு சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைக்கும் போது அக்குரணை பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் அஜ்மீர் பாரூக் அங்கு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அருத்கமை, தர்காடவுன், உயிரிழப்பு என்பவற்றுக்கப்பால் பள்ளி உடைப்பு மற்றும் ஷரியா சட்டங்களில் கை வைப்பது என்பது முஸ்லிம்களுடைய அடிவயற்றில் கலக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக கருத வேண்டியுள்ளது. இதுவே பேசுபொருளுக்குரிய முக்கிய காரணியாகும்.

இந்தப் பிரச்சினைகள் தொடாபாக தேர்தல் பிரச்சார காலட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்புத் தொடாபாகவும் நடந்த முடிந்த விடயங்கள் தொடர்பாகவும இனிமேல் இந்தப் பொது பலசேனா என்ற அமைப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு எந்த தீங்கும் இழைக்க இடமளிக்க மாட்டோம் என்கின்ற  ஒரு பகிரங்கமான வேண்டுகளை முன்வைத்திருக்க முடியும். அவர் அவருடைய தேர்தல்  பரப்புரையில் இது விடயமாக ஒரு சிறு துளி கூட கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக, இந்த நாட்டில் வாழும் சிங்கள. தமிழ், முஸ்லிம் ஆகிய மக்களுடைய பாதுகாவலன் என்று அடிக்கடி கூறி வருகின்றார். அது எந்தளவு சாத்தியமாகும் என்ற கேள்வி இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு இதுவரையும் எந்த சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே இந்த அச்ச நிலையிலான வாழ்க்கை முறையிலிருந்து முஸ்லிம் மக்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். இம்மக்களுடைய பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்தற்கான செயற்பாடுகள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சிறுபான்மையின சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுபவர்களுக்கு உங்களுடைய வாக்கை வழங்குங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி


No comments

Powered by Blogger.