Header Ads



யா அல்லாஹ்...! நிம்மதியாக வாழ ஓர் ஆட்சியாளனைத் தருவாயாக...!!

(அபூ ஸஈத்)

எனது அருமை இஸ்லாமிய நெஞ்சங்களே.

இன்னும் மூன்று தினங்களில் நாம் சந்திக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொருவரும் தமது உரிமையான வாக்கை தாம் விரும்புபவருக்கு அளிக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம்.  மொத்தம் 19 பேர் இத்தேர்தலில் போட்டியிட்டாலும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் மகிந்த ராஜபக்சவா? மைத்திரி சிறிசேனவா? என்பதே கேள்விக்குறி.

முஸ்லிம்களைப் பொறுத்தளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை இன்னும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் தமக்காக ஜனாதிபதி வழங்கிய சலுகைகளையும், உதவிகளையும், சில கிராம, ஊர் மக்களுக்குச் செய்துள்ள சேவைகளையும் குறிப்பிட்டு வாக்குச் சேகரிக்கின்றனர். (தாம் கைகோர்த்து நிற்கும் ஜனாதிபதிக்காக வாக்குச் சேகரிக்கும்) பொது பல சேனா  முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்த அட்டகாசங்களின்போது மைத்திரி ஒன்றும் பேசவில்லை என்பதும், பொது பல சேனாவுக்கு எதிராக பொதுக் கட்சியுடன் இணைவதாக இருந்தால் எப்போதே அரசாங்கத்தை விட்டும் வெளியாகி இருக்க வேண்டும் எனவும் கட்சி மாறிய பிரதான அமைச்சர்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மாற்றுத் திசையில் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் அரசாங்கத்தை விட்டும் வெளியேறி தமக்கு வழங்கப்பட்ட சொகுசான வசதி வாய்பு;புக்களை உதறித் தள்ளியது மாத்திரமின்றி, உயிருக்கே உளை வைக்கப்படுமா? என்ற ஆபத்தான ஓர் நிலைமையையும் சுமந்தே மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்குச் சேகரிக்கும் பனியில் ஈடுபட்டுள்ளனர். மைத்திரியை ஆதரிப்பதற்கும், மகிந்தவை எதிர்ப்பதற்கும் பிரதான காரணங்களாக அவர்கள் குறிப்பிடுபவை: இஸ்லாத்துக் கெதிராகவும், முஸ்லிம்களைப் பற்றியும் யாரும் மேற்கொள்ளாதளவு பகிரங்கமாகவே கட்டவிழ்த்த அநியாயக்கார பொது பல சேனாவுக் கெதிராக எந்த சட்ட நடவடிக்கையும் இந்த அரசாங்கத்தால் எடுக்கப்படாமையும், முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்தில் சொரணை அற்ற எடுப்பார் கைப்பிள்ளை நிலையில் தான் இருக்கும் நிலை என்பதுமே.

எனவே தற்போதைய நிலையில் யார் எதனைச் சொன்னாலும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் மாத்திரம் கருத்தில் எடுக்காது பிற சமூகத்தினருடன் ஒற்றுமையாக வாழும் ஓர் நிலையைப் பெறுவதாக இருந்தால் நாம் யாருக்கு வாக்களிப்பது சிறந்தது என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இயல்பாகவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக முஸ்லிம்களுக்கெதிராக பாரிய எந்தத் தவறுகளையும் செய்ததாக இல்லை எனலாம். எனினும் அவரது ஆட்சியின் இறுதியில் நடந்த வடுக்கள் இலங்கை வரலாற்றில் யாரும் மேற்கொள்ளாதவைகளே. அவற்றைத் தடுத்து நிறுத்துமாறு பல வழிகளில் அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டபோதும், பாதுகாப்பு அமைச்சரின் அழுத்தம் காரணமாகவோ அவர் எள்ளளவும் அவர் பொருட்படுத்தவில்லை.

மார்க்க விடயங்களில் கண்டவன், கடியவன் எல்லோரும் எம்மை அடக்கி ஒடுக்கி மிரட்டினார்கள்.  
நாம் ஹலாலான உணவை தெரிவு செய்யும் மத மற்றும் மனித உரிமையை இல்லாமல் ஒழித்தபோது, எமது முஸ்லிம் சகோதர வியாபரிகளின் பொருளாதாரத்தை மட்டம் தட்டுவதற்காக பெண்களையும், சிறுவர்களையும் ஏவிவிட்டு அவதூறுகளைக் கிழப்பி கடைகளுக்குத் தீ மூட்டியபோது,  முஸ்லிம் கிராமங்களை மிரட்டி, பல வீடுகளுக்குத் தீமூட்டி, பல உயிர்களைக் கொன்று, பல குழந்தைகளை அநாதைகளாகவும், பல தாய்மார்களை விதவைகளாகவும் மாற்றியபோது,  எமது பெண்களின் மரியாதையான அபாயா ஆடையை பயங்கரவாத ஆடை என்றும், சில பாடசாலைகளில் எந்த முன்னறிவிப்போ, கருத்துப் பரிமாறல்களோ இன்றி இஸ்லாமிய சீருடையைத் தடை செய்தபோது, வேலைத் தளங்களில் தொழில்புரியும் முஸ்லிம் யுவதிகளுக்கு அபாயாவைத் தடை செய்தபோது,  நான்கைந்து பேர் சேர்ந்தே கூடி முடிவெடுத்து  மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களை இழுத்து மூடியபோது, பொம்மை செய்து ''அல்லாஹ்'' என்று எழுதி பாதையில் இழுத்துச் சென்று தீமூட்டி எமது உணர்வுகளைக் கிழப்பி சண்டையொன்றை இழுத்தெடுக்க முணைந்தபோது, கண்டி மாநகரில் நடைபெற்ற பொது பல சேனாவின் மாநாட்டில் ''முஸ்லிம்கள் பிறருக்கு வழங்கும் உணவில் மூன்று முறை எச்சில் துப்பி வழங்குமாறு அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது'' என ஓh அப்பட்டமான பொய்யைக் கூறியபோது, எம்மைத் தீண்டிக் கொண்டே இருக்கும் இன, மத வெறி பிடித்த பொது பல சேனாவின் காரியாலயத்தை எமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சரே திறந்து வைத்தபோது, நான்கு திருமணங்கள் முடித்து, பல குழந்தைகளைப் பெற்று இந்த நாட்டை முஸ்லிம் நாடாக்கும் திட்டத்துடனே முஸ்லிம்கள் செயல்படுவதாக துவேஷ உணர்வு விதைகளை பௌத்தர்களுக்கு மத்தியில் நட்டியபோது, முஸ்லிம் வைத்தியர்கள் வழங்கும் மருந்து வில்லைகளிலும், முஸ்லிம் கடைகளில் வழங்கும் சொக்லேட்களிலும் கருத்தடை பவுடர்கள் பயன்படுத்தப்பட்டு பௌத்தர்களுக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளதாக கட்டுக் கதையை கட்டவிழ்த்தபோது, இந்த நாட்டில் இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான திருமண, மரண சட்டங்களை உள்ளடக்கிய காதி நீதி மன்றங்களை ஒழிக்க வேண்டும் எனக் கூறியபோது, எமது பள்ளி வாசல்களில் அத்துமீறிச் செய்த அநியாயங்களின்போது  எமது உணர்வலைகள் எவ்வாறிருந்தன என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இவைகள் மாத்திரமல்ல இன்னும் ஏராளம்.

இப்போது முஸ்லிம்களாகிய நாம் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்தாலும் முஸ்லிம்களில் 95 விகிதத்துக்கு மேல் பொது அணிக்கே வாக்களிப்பர் என்ற உண்மையை அவர்களே அறிந்து வைத்துள்ளனர். 

எனவே இது வரை பொது பல சேனாவுடன் ஒட்டியே இருக்கும் அரசாங்கம் வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக குறல்கொடுக்கும் அமைச்சர்களுக்கு சொகுசான வாழ்க்கை வாழலாம் என்பதில் ஐயம் கிடையாது. ஆனால் பொது மக்களாகிய நாம் மீண்டும் கோழைகளாகவும், பீதியுடனும், பொது பல சேனாவின் பிரத்தியேக அடாவடித்தனங்களுடனும், எஞ்சியுள்ள எமது தனித்துவங்களை இழந்தும், சீரழிந்த நிலையிலும் வாழ விரும்பினால் இந்த மகிந்த ராஜபக்சவை வெற்றி பெறச்செய்வோம்.

தத்தம் கட்சிகளை வெற்றி பெறச் செய்வதற்காக மேடை போட்டு கூக்குரலிடும் அமைச்சர்களின் கருத்துகளில் சரியும் இருக்கும், தவறும் இருக்கும். அவைகளை ஒரு புறம் வைத்துவிட்டு நடந்த யதார்த்தங்களையும், உண்மைகளையும் பற்றி சிந்திப்போம். 

ஹெல உருமயவுடன், பொது பல சேனாவை ஒப்பிட்டுப் பார்த்தால், யார் தரம் கெட்டவர்கள் என்பதை உணரலாம். சந்திரிகா குமாரதுங்க அவர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள். அனுரகுமார திஸாநாயக்க மகிந்தவின் குடும்பத்துக்கான செலவுகளைப் பற்றிப் பட்டியல் இட்டு பகிரங்கமாகக் கூறியபோதும், ஒன்றையும் மறுக்க முடியாத ஜனாதிபதியின் குடும்பம். எத்தனை கோடிகள் ஊழல்????  சிந்திப்போம். சிந்திப்போம்.

  எனவே, நாம் முஸ்லிம்கள். எமது முயற்சிகளுக்கு அப்பால்  
· அல்லாஹ்விடம் தொழுதும், அழுதும் பிரார்த்தனை செய்து உதவி தேடுவோம். அவன் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குவான், நாடியவர்களை ஆட்சியிலிருந்து விலக்குவான்.
· ஈமான் கொள் வேண்டிய ஆறு விடயங்களில் இறுதி விடயத்தை சற்று மீட்டிப் பார்ப்போம். நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் விதியின் பிரகாரமே நடக்கும்.
· யார் ஆட்சி பீடம் ஏறினாலும் எமது உயிரை விட மேலான ஈமானை இழந்துவிடாமல், அல்லாஹ் மீதே பூரண நம்பிக்கை வைப்போம்.
· அல்லாஹ்வை நினைவு கூர்ந்தே வாழ்வோம். ''யார் என்னை மறந்து வாழ்வாரோ அவருக்கு நெருக்கடியான வாழ்வை நாம்  ஏற்படுத்துவோம்.'' (ஸுரா: தாஹா)
· தேர்தல் நாட்களில் உட்பட எப்போதும் ஐவேளைத் தொழுகை எம்மீது கடமை என்பதையும், அதனை விடுபவன் முஃமினாக இருக்க முடியாது என்பதையும் உணர்வோம்.
· பௌத்தர்கள் செறிந்து வாழும் ஒரு நாட்டில் வாழும் நாம் மிக நிதானமாக நடந்துகொள்வோம்.

யா அல்லாஹ்! எமது நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளையும் தனித்துவங்களையும், மார்க்கக் கடமைகளையும், ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்க தடையில்லாத, நிம்மதியாக வாழ ஓர் ஆட்சியாளனைத் தருவாயாக.

4 comments:

  1. Insah Allah , Aameen . Allah knows best, we have lot of anger with MR but we Can do nothing, everyone pray and make dua.

    ReplyDelete
  2. Masha allah,we need peace not only muslim community.we should think whole country people.may allah give us peace life for our nation.mankind is family of allah

    ReplyDelete
  3. Allah calling in quran yaaayyuhannasu.ya muslims.we should love with mankind.any reliegion no harm.we are ummath of rashool sallalahu alahiwassalam,

    ReplyDelete
  4. Aameen, Aameen, AlhamdulillahI rabbilaalameen. Allahu Akbar.Abu sahead. Ur article absolutely correct this time n all the Muslim life . Should follow it.Jazakkalukaira.

    ReplyDelete

Powered by Blogger.