முஸ்லிம் காங்கிரஸினை உருவாக்க எனது முன்யோசனையும் கருத்திற்கொள்ளப்பட்டது - பிரதமர் ஜயரத்னா
(JM.HAFEEZ)
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்குவது தொடர்பாக எனது முன்யோசனையும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கட்சி விலகினாலும் மக்கள் எம்முடன் உள்ளனர் என்று பிரதமர் டி.எம்.ஜயரத்னா தெரிவித்தார்.
(4.1.2015) புசல்லாவையில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூடத்தில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
ஒரு சில கட்சிகளின் ஒரு சில அங்கத்தவர்கள் பொது எதிரணியின் அபேட்சகருக்கு ஆதரவு தெரிவித்தாலும் பொது மக்களது விருப்பம் அவர்கள்பால் இல்லை எனலாம்.
உத்தியோகப் பற்றற்ற முறையில் அனேகர் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்களுக்கு அதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னைய காங்களில் முஸ்லிம்மக்களுக்கென்று நாட்டில் ஒரு தனிக்கட்சி இருக்கவில்லை.முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்குவது தொடர்பாக எனது முன்யோசனையும் இருந்துள்ளது. இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமக்கு எதிராக செயல்பட்டாலும் முஸ்லிம் மக்கள் எமக்கே வாக்களிக்க உள்ளனர்.
யுத்தப் பாதிப்புக்களால் சின்னா பின்னப்பட்டிருந்த தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நிம்மதியாக வாழும் சூழலை மகிந்த ராஜபக்ஷவே உருவாக்கித்ததந்தார்.
இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. நாட்டை மீண்டும் யுத்த நிலைமைக்கு கொண்டு போக நாட்டு மக்கள் எவரும் விரும்பமாட்டார்கள். எனவே கடந்த காலங்களை விடவும் மிகக் கூடுதலாக வாக்குகள் ஜனாதிபதிக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் கிடைக்கும். இன்று வடக்கு கிக்கு மாகாண மக்களின் பொருளாதாரம் வளமுள்ளதாக உள்ளது.
மேடைகளில் ஏறி பொது வேட்பாளர் எத்தனை தூரம் பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினாலும் நூறு நாட்கள் அல்ல நூறு வருடம் சென்றாலும் அவரால் நிறைவேற்ற முடியாது. ஆனால் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னால் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை மட்டுமே நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறார். நாட்டை சமநிலையில் வழிநடத்துவதே அவரது இலக்காகும். அந்த அடிப்படையில் தொழிற்படும் மகிந்த ராஜபக்ஷ அவர்களது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இக்கூட்டத்தின் போது புசல்லாவைப் பிரதேசத்திலுள்ள ஐ.தே.க.யைச் சேர்ந்த மூத்த அங்கத்தவர்கள் பலர் பொதுஜன ஐக்கிய மக்கள் முன்னணியுடன் இணைந்து கொண்டனர். விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, மத்திய மாகாண சபை அங்கத்தவர் அனுராதா ஜயரத்ன உற்படப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
இன்னும் மூன்று நாள் தான் எஞ்சியுள்ளன. இப்படி கதைவிட்டுப் பயனில்லை. அவசரமாக நாளைக்கே ஒரு பெல்டி அடியுங்க.
ReplyDeleteஒருவேளை இந்த அரசாங்கத்துடன் ஒட்டி இருப்பவர்கள் குடிக்கும் நீரில் ஏதோ கலக்கக்கூடாத்து கலந்திருக்குமோ, காரணம் இவங்களோட பேச்சு எல்லாமே ஒரே மாதிரியா இருக்கு. ஒன்றிருக்க ஒன்றை பேசுவதாக இருக்கே.
ReplyDelete