Header Ads



''5 ஆயிரம் ரூபா நோட்டு'', அவதானத்துடன் இருக்க வேண்டும் - மைத்திரி கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அரசாங்கத்தினால் போலியான 5 ஆயிரம் ரூபா நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உடுநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று 5 ஆயிரம் ரூபா நோட்டுக்கள் போலியாக அச்சிடப்பட்டுள்ளன. இதனை தெளிவாக சொல்ல வேண்டும். நாளை அல்லது நாளை மறுதினம் இவர்கள் வந்து 5000 நோட்டுக்களை கொடுத்து தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருவார்கள். அவதானத்துடன் இருக்க வேண்டும். வர்த்தகர்களும் இந்த விடயத்தில் அவதானத்துடன் இருப்பது நல்லது என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.