Header Ads



மைத்திரிக்கான கூட்டத்தினை ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - 3 பேர் காயம்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கஹாவத்தையில் இன்று (05) இடம்பெறவுள்ள பொதுகூட்டத்தினை ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி காஹவத்தையில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மூவரும் காவத்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

வாகனங்களில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

காயமமைந்தவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக காணப்படுவதாகவும், அவர் தற்போது அதிதீவிர பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.