சல்மா ஹம்சாவின் வீட்டின் மீது, கைக்குண்டு தாக்குதல்
-அனா-
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சாவின் வீட்டின் மீது இன்று (4.1.2015)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைக்குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இதனால் அவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் பின் பக்கத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தலைமையிலான பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதுடன் இங்கு பெற்றோலினால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டே வீசப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தெரிவித்தார்.
மேற்படி சல்மா ஹம்சா கர்தான்குடி நகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினராக இருந்து வருவதுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்து பெண் செயற்பாட்டாளராகவும் மனிதநேய செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
நேற்று சனிக்கிழமை(3.1.2015) அதிகாலை காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூகின் வீட்டு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு கைக்குண்டுகள் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கெரினா(ய்) ஒருவன் இருக்கின்றான் அவனது வேலைதான் இது. அவன் தன் இனத்தையே காட்டிக்கொடுத்தவன். தற்போது அவன் கொள்ளைக்காரர்கள் குடும்பத்தில் செல்லப்பிள்ளையாக இருக்கின்றான் கருனாகம் போலானவன்.
ReplyDelete