ஹரம் ஷரீபில்..!
அல்லாஹ் என் மீது அருள் புரிந்தான்
என் உயிரை மிகைத்த
நேசத்தின் நாயகன் நபிகளாரின்
மேனி தடவிய தென்றலில் நனைந்தேன்
மதினா உலகில் எங்கும் காணாத அமைதியை
தன் மீது போர்த்தி கொண்டது
அல்லாஹ்வின் கருணை
என்னை அரவணைத்து கொண்டது
என் ஏக்க பெரு மூச்சு தணிந்தது
உடலில் இருந்து அறுந்து போனேன்
பௌதீக தோற்றம் இடிந்து நொறுங்கியது
ஞாபகத்தில் எதுவும் இல்லை
எனது ரஸூலை(ஸல்)தவிர
யா ரஸூலுல்லாஹ்
நீங்கள் என் சரித்திரத்தை
மாற்றி எழுதிய எழுதுகோல்
உங்களின் பெயர் என் உணர்வாகியது
உங்களின் பாதை என் பயணமாகியது
உங்களின் புனிதத்துவத்தை
கவித்துவத்தால் எழுதி விடமுடியாது
எழுதி முடிக்க ஆயுளின் நீளம் போதாது
நீங்களே நிகரில்லா கவிதை
படிக்க படிக்க திகட்டாத கவிதை
உலகம் பசுமை அடையும் ஏகத்துவ விதை
அன்று பிறந்திருந்தால்
கவிதைக்கு அட்டையாக ஓட்டி இருக்கலாம்
ஒரு உயிர் எழுத்தை கொடுத்திருக்கலாம்
மறுமையிலே
உங்கள் பந்தியில் முந்தி நிற்கும்
பாக்கியத்தை அல்லாஹ் தருவானாக
muhamed irfan

Masha Allah, how he brings his love about Rasulullah (S/A) , when I read I feel more then anyone.
ReplyDeleteRealy very Nice
ReplyDelete