Header Ads



இலங்கைக்கு முஸ்லிம் இனத்துவ கட்சிகள் அவசியமில்லை - சுவிஸில் அன்வர் மனதுங்க

மர்ஹும் அஷ்ரபின் மறைவிற்கு பின்னர், முஸ்லிம் காங்கிஸ் உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் சார்பு கட்சிகளை சிங்கள சமூகம் இனவாத கண்ணோட்டத்தோடு நோக்குவதாக பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் அன்வர் மனதுங்க குறிப்பிட்டார்.

சூரிச் - சிளீரனில் இலங்கை முஸ்லிம்களால் நடாத்தப்படும் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவின் பின்னரான கேள்வி - பதில் நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வு 25-12-2014 அன்று நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அன்வர் மனதுங்க,

சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே முந்திய காலத்தில் நம்பிக்கையுடன் கூடிய சிறந்த உறவு நிலை காணப்பட்டது. சிங்கள குடும்பங்கள் வங்கிகளை நாடிச்சென்று தமது, பணத்தை வைப்பிலிடுவதைவிட, முஸ்லிம்களிடமே அவற்றை பாதுகாப்பாக வைப்பிலிட்டிருந்தனர். அந்தளவு முஸ்லிம் - சிங்கள உறவு காணப்பட்டது. துரதிஷ்டவசமாக அந்நிலை இன்று இல்லை.

சிங்கள் - முஸ்லிம் உறவு முற்றுமுழுதாக தேய்ந்துவிட்டதெனவும் கூறமுடியாது. இந்த உறவு நிலை தொடர்ந்து கீழ்மட்டத்திற்கு செல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை நமக்கு உள்ளது. மார்க்கத்தை விட்டுக்கொடாத வகையிலும் எமது செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.

சிஙகள சமூகத்துடனான திறந்த கலந்துரையாடல்கள் மூலம் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் பற்றியும் நிலவும் தப்பான அபிப்பிராயங்களை நீக்கமுடியும்.

மர்ஹும் அஷ்ரபின் மறைவிற்கு பின்னர், முஸ்லிம் காங்கிஸ் உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் சார்பு கட்சிகளை சிங்கள சமூகம் இனவாத கண்ணோட்டத்தோடு நோக்குகின்றனர். முந்திய காலங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிங்களவரின் வாக்குளின் துணையுடன் தெரிவு செய்யப்பட்டனர். அவ்வாறே சிங்களவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளின் துணைய மக்கள் பிரதிநிதிகளாக தெரிவாகினர். காலப்போக்கில் இந்நிலை மாறி, முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பது என்ற நிலை உருவாகியுள்ளது.

முஸ்லிம்களிடம் உருவான இனத்துவ கட்சிகளின் தோற்றத்திற்கு பின்னரே இந்நிலை ஏற்றபட்டது. இதன் அபாயத்தை உணர்ந்த நிலையிலேதான் மர்ஹும்  அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கினார். இருந்தபோதும் அவரது மறைவின் பின்னர் முஸ்லிம - சிங்கள சமூகங்களுக்கிடையிலான உறவுநிலையில் மாற்றத்தை உருவாக்கியது. இதனால்தான் முஸ்லிம்களுக்கு இனத்துவ கட்சிகள் தேவையில்லை என்கிறேன். முஸ்லிம் இனத்துவ கட்சிகளின் போக்கே பொதுபுல சேனா உள்ளிட்ட அமைப்புக்களின் தோற்றத்திற்கும் வித்திட்டன எனவும் அன்வர் மனதுங்கள் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவர் அல்ஹாஜ் ஹனீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் பங்கேற்றதுடன், நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஐரோப்பிய இஸ்லாமிய நிலைய செயலாளர் அமீர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தகக்து.

2 comments:

  1. He is correct. How many parties for Muslims? The Muslims were never looked after by those parties, instead Sinhala- Muslim division was created by those parties.

    ReplyDelete
  2. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    மேற்படி சகோதரின் கருத்து உண்மையானதாக காணப்படுகின்றது .ஏனனெனில் மறைந்த எமது தலைவர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் பெரும்பான்மை கட்சியில் இருந்து இந்த நாட்டுக்கும் ,முஸ்லிம்களுக்கும் பாரிய பணிகளை செய்துள்ளார்கள் .அவரை அனைவரும் மதிக்கின்றார்கள் .அவருடைய கட்சி தேர்தலில் தோல்வியுற்ற போதிலும் அவர் கட்சிகள் மாறவில்லை .அவர் கண்ணியமாக வாழ்ந்து மறைந்தார் .இதனால் அவருடைய கட்சியிலும் ஏனைய கட்சிகளிலும் அவருக்கென்றொரு மதிப்பும் ,மரியாதையும் காணப்படுகின்றது .ஆனால் தற்போதைய அரசியல் அங்கும் இங்கும் மாறி மாறி இந்நாட்டு முஸ்லிம் மக்களை சந்தர்ப்பவாதிகள் போன்று காட்டியுள்ளார்கள் .இது போன்ற விடயங்கள் பெரும்பாமை சமூகங்களை இஸ்லாத்தின் பக்கம் கவர்வதிலிருந்து அவர்களை தூரமாக்கி விடும் .

    ReplyDelete

Powered by Blogger.