தென்கிழக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டது
-மு.இ.உமர் அலி-
இன்று அதிகாலை நான்கு மணியளவில் பொங்கிவரும் வெள்ளம் தென்கிழக்கு பலகலைக்கழக வளாகத்தினுள்ளும் நுழைந்தது,சுமார் மூன்று நான்கடி உயரத்திற்கு வெள்ளநீர் உட்புகுந்தது,பல்கலைக்கழக பதிவாளர் அல்ஹாஜ் சத்தார் அவர்களது தலைமையில் ஏனைய நிருவாகிகள்,துறைத்தலைவர்களுடன், பல்கலைகழக போலீஸ் பிரிவின் பொறுப்பாளர் ரபீக் (CHIEF INSPECTOR OF POLICE) மற்றும் இலங்கை இராணுவம்,ஒலுவில் கடற்படையினரின் உதவியுடன் பல்கலைகழக விடுதிகளில் தங்கியிருந்த சுமார் ஐந்நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் அவர்களது ஊர்களுக்கு பாதுகாப்பாக சென்றடைய போக்குவரத்து வசதிகளை பல்கலைக்கழக நிறுவகம் செய்து கொடுத்துள்ளதாகவும் மிகவும் தூர இடங்களைச்சேர்ந்த மாணவர்கள் அறுபது பேர் வரை இன்று இரவு அவர்களது பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பலகலைக்கழக உபவேந்தர் இஸ்மாயில் அவர்கள் கருத்துத்தெரிவித்தார், மேலும் குறிப்பிடத்தக்க இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்திருக்கக்கூடும் என்றும் அவை பற்றிய துல்லியமான கணக்கு ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.தம்ரோ ரக தளபாடங்கள் நீரிலமிழ்ந்ததால் அவை பெருமளவில் சேதமடைந்து பாவனைக்கு உகந்ததற்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வெள்ளப்பெருக்கினால் STAFF DEVELOPMENT CENTER,POST GRADUATE UNIT,MANAGEMENT INFORMATION SYSTEM போன்ற பல்கலைக்கழகத்தின் பகுதிகளே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட இது போன்ற ஒரு வெள்ளத்தினால் பல்கலைக்கழகத்தின் அதிக வளங்கள் பாதிக்கப்பட்டதனை மனதில்கொண்டு அதன் பின்னர் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் உயரம் கூடியதாகவே அமைக்கப்பட்டன,அதன் காரணமாக அவ்வாறமைக்கப்பட்ட எந்தக்கட்டிடமும் பாதிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
மறு அறிவித்தல்வரை பலகலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் எனவும் உபவேந்தர் அறிவித்தார்.
.jpg)
Post a Comment