Header Ads



முஸ்லிம்களுக்கு சிறியதாக இருப்பவை, மாற்று மதத்தவர்களுக்கு பெரிதாகத் தெரியலாம்..!

(J.M.Hafeez and Mohamed Asik)

முஸ்லிம்களாகிய எமக்கு மிகச் சிறிய விடயங்களாக இருப்பவை சில வேளைகளில் காபிர்களது கண்ணுக்கு மிகப் பெரிதாகத் தெரியலாம். சில விடயங்கள் பயங்கர விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஊதாரணத்திற்கு ஹலால் விடயம் எமக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அது பேரினவாத காபிர்கள் மத்தியில் ஏதோ பாரி பூதாகரத்தை ஏற்படுத்தி அதற்காகப் பலகொடிகளை செலவிட்டு இன்னும் அதன் வடு தீர்ந்த பாடில்லை.

ஹலால் என்பது இலாத்துடன் ஒன்றரக் கலந்த விடயம். ஆனால் சமயத்துடன் சம்பந்தமே இல்லாத சில விடயங்களால் பயங்கரப் பிரச்சினைகள்  கூட உருவாகலாம். அண்மையில் பேரின வாதிகளின் ஒரு இணையத்தில் பிரசரிக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்றை இத்துடன் தருகிறோம். அதில் குறிப்பிடப்பட்ட விடயம் என்ன என்பதை சிங்கள மொழி தெரிந்தவர்களால் விளங்கிக் கொள்ள முடியும். மொழி தெரியாதவர்களுக்கு அதன் மொழி மாற்றத்தையும் தருகிறோம்.

'கிழக்கு மாகாண ஜிஹாத் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளது. அரசு இன்னும் மரண தூக்கத்தில் இருக்கிறது. இதோ சாட்சியம். இந்த வேனின் பின் புறமாக எழுதப்பட்டிருப்பது அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாதவனை கொன்று விடு என்ற வசனமும் வாள் ஒன்றுமாகும். சிங்களவர்களே தூங்கிக் கொண்டிருங்கள். எமது தொலைக்கும் நாள் தொலைவில் இல்லை(தூசன வாhத்தைப் பிரயோகத்தில் கூறப்பட்டுள்ளது). பாரிய அழிவு ஏற்பட முன் இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து அறிவுறுத்தவும்'. என்பதே இதன் சாராம்சன். 

அன்பின் சகோதரர்களே அங்கு என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெரிந்த விடயம். கலீமா எமது உள்ளத்தால் நம்பிக்கை கொள்ள வேண்டியது. அது எமது உள்ளத்தில் இருக்க வேண்டியது. சவூதி அரேபியாவின் தேசிய கொடியின் ஒரு பகுதி அது என்பது தெரியும். ஆனால் அதற்கு வழங்கப்பட்டுள்ள அர்த்தம் மிகப் பயங்கரமானது. எனவே எம்மவர்கள் தேவையற்ற விடயங்களை தூக்கிப் பிடித்து வீண் பிரச்சினையை ஏன் உருவாக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.