Header Ads



அமெரிக்கா மீது, சவூதி அரேபியா கொண்டுள்ள பாசம் - உலகளவில் பெரும் பரபரப்பு


சவூதி அரேபியா அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெயின் விலையை குறைத்ததால் மசகு எண்ணெயின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு குறைந்துள்ளது.

 உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து பரல் ஒன்று சுமார் 12 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதற்கு முக்கிய காரணம் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய நாடாக உள்ள சவூதி அரேபியா அமெரிக்காவுக்கு மட்டும் எண்ணெய் விலையை குறைத்துள்ளதுதான்.

 சவூதி அரசுக்கு சொந்தமான சவூதி அரம்கோ என்ற உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் அமெரிக்காவுக்கு  அளிக்கும் மசகு எண்ணெயின் விலையை செவ்வாய்க்கிழமை குறைத்தது. அமெரிக்கா தங்கள் நாட்டிலேயே பல எண்ணெய்க் கிணறுகளை தோண்டத் தொடங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் அதிகளவில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

 இந்தப் போட்டியை சமாளிக்கவும் அமெரிக்காவில் தோண்டி எடுக்கப்படும் எண்ணெயை விட தங்கள் நாட்டு எண்ணெயை குறைந்த விலையில் அமெரிக்காவுக்கே விற்கவும் சவூதி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

 மேலும் ரஷ்யா, வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளிடம் இழந்த சந்தையை மீண்டும்  பிடிக்கவும் சவூதி இந்த விலை குறைப்பைச் செய்துள்ளது. சவூதியின் நடவடிக்கையால் எண்ணெய்ச் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 எண்ணெய்ச் சந்தையில் தாங்கள் மீண்டும்  சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தில் சவூதி செய்துள்ள விலை குறைப்பால் மற்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கவலை அடைந்துள்ளன

No comments

Powered by Blogger.