Header Ads



உலகின் சக்திவாய்ந்த நபர்கள் - விளாடிமிர் புதின் முதலிடம்

அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் என 72 பேர் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, இப்பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளார்.

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி (36-வது இடம்), ஏர்சலார் மிட்டல் அதிபர் லட்சுமி மிட்டல் (57-வது இடம்), மைக்ரோசாப்ட் தலைமை செயல் அலுவலர் சத்யா நாடல்லா (64-வது இடம்) ஆகிய இந்தியர்களும் பட்டியலில் உள்ளனர். 

No comments

Powered by Blogger.