Header Ads



பாராளுமன்றத்தில் 2 அமைச்சர்களுக்கிடையில் சண்டை

2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவுக்கும் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில், இன்று கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. 

அண்மையில், மீன்பிடித்துறை அமைச்சுக்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்ட மீனவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இந்த வாக்குவாதம் இடம்பெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை தன்னால்; ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, புத்தளம் மாவட்டத்திலுள்ள மீனவர் சமுதாயத்தின் ஆதரவுடன் நாடாளுமன்றுக்கு தெரிவான நான், மீனவர்கள் பற்றி நன்கு அறிந்தவன் என்று குறிப்பிட்டார். 

அத்துடன், கடலில் ஆபத்தான தொழில் செய்யும் இவர்கள் ஆவேசமானவர்கள். அவர்கள் வியர்க்க விறுவிறுக்க கடினமான கடலலையுடன் போராடுவதால் கடினமானவர்களாகவே காணப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் சமாதானமாக வாழும் சமுதாயத்தினராகவே உள்ளனர். அவர்களா நாமே அன்பாக நடத்த வேண்டும் என்று அமைச்சர் மில்ரோய் கூறினார். 

அவர்கள், தங்களது குறைகளைக் கூறி நிவாரணம் பெறுவதற்காக அமைச்சுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது எந்த வகையில் நியாயமானதாகும் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். 

ஆர்ப்பாட்டத்திர் ஈடுபட்ட மீனவர்கள் அனைவரும் எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால், அவர்கள் அனைவரும் கத்தோலிக்கர்கள். அப்படியாயின், அவர்கள் எவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்க முடியும்? என்றும் அமைச்சர் கேட்டார். 

இந்த கருத்துக்களால் கோபமடைந்த மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, 'ஆர்ப்பட்டாத்தில் ஈடுபட்டவர்களில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் இருந்தனர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார் எனக் கூறினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், மீன்பிடி சமுதாயத்தைத் தவிர்ந்த ஏனைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர் ராஜித, ஒட்டுமொத்தத்தில் இந்த தாக்குதலான மீனவ சமுதாயத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகும் என்று கோபமாகக் கூறினார்.  

No comments

Powered by Blogger.