Header Ads



பல்டி அடித்தால் 50 மில்லியன் - முழு குடும்பத்திற்கும் ஐரோப்பாவில் பிரஜாவுரிமை

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொழும்பில் 11-11-2014 இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

இதன்முதல் கட்டமாக தம்மை 50 மில்லியன் ரூபாய்களுக்கு விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்தாக மேல் மாகாண சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் நடிகருமான நளின் பிரதீப் உடவல குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் தமது முழுக்குடும்பத்துக்கும் கனேடிய, அவுஸ்திரேலிய அல்லது நெதர்லாந்து பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் உறுதியளித்தாக உடவல குறிப்பிட்டுள்ளார்.

உடவல, இலங்கையின் பிரசித்தி பெற்ற தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகராவார்.

No comments

Powered by Blogger.